தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம், சூப்பர் 12 - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!
டி20 உலகக்கோப்பை தொடரின் எட்டாவது சீசன் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் நாளை நடைபெறும் சூப்பர் 12 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதில் டெம்ப பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் ஜிம்பாப்வேவை எதிர்கொண்டது. ஆனால் இப்போட்டியில் அந்த அணி கடைசிவரை போராடியும் மழை குறுக்கிட்டதன் காரணமாக ஆட்டம் பாதியிலேயே கைவிடப்பட்டது.
இதனால் இரு அணிகளுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்பட்டது. இது தென் ஆப்பிரிக்க அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இனிவரும் போட்டிகளில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.
அந்த அணியின் பேட்டிங் ஆர்டரைப் பொறுத்தவரையில் குயின்டன் டி காக், டேவிட் மில்லார், ரைலீ ரூஸோவ், ஐடன் மார்க்ரம் ஆகியோரும், பந்துவீச்சுல் காகிசோ ரபாடா, ஆண்ட்ரிச் நோர்ட்ஜே, லுங்கி இங்கிடி ஆகியோரும் இருப்பது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.
அதேசமயம் ஷாகிப் அல் ஹசன் தலைமையிலான வங்கதேச அணி சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் நெதர்லாந்தை வீழ்த்திய வெற்றியுடன் அடுத்த போட்டியில் களமிறங்குகிறது. இதனால் அந்த அணியும் இந்த உலகக்கோப்பை தொடரில் தங்களை வலிமையான அணிகளில் ஒன்றாக காட்டிக்கொள்கிறது.
அந்த அணியின் பேட்டிங்கில் ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், சௌமியா சர்கார் ஆகியோரும் பந்துவீச்சில் முஷ்தபிசூர் ரஹ்மான், டஸ்கின் அஹ்மத், மொசடெக் ஹொசைன் ஆகியோரும் இருப்பது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - தென் ஆப்பிரிக்கா vs வங்கதேசம்
- இடம் - சிட்னி கிரிக்கெட் மைதானம்
- நேரம் - காலை 8.30 மணி (இந்திய நேரப்படி)
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 7
- வங்கதேசம் - 0
- தென் ஆப்பிரிக்கா - 7
உத்தேச லெவன்
தென் ஆப்பிரிக்கா: டெம்பா பவுமா (கே), குயின்டன் டி காக், ரைலீ ரூஸோவ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வெய்ன் பார்னெல், கேசவ் மகராஜ், ககிசோ ரபாடா, அன்ரிச் நோர்ட்ஜே, லுங்கி இங்கிடி.
வங்கதேசம்: நஜ்முல் ஹொசைன் சாண்டோ, சௌமியா சர்க்கார், லிட்டன் தாஸ், ஷாகிப் அல் ஹசன்(கே), அஃபிஃப் ஹொசைன், யாசிர் அலி, நூருல் ஹசன், மொசாடெக் ஹொசைன், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஹசன் மஹ்மூத்.
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர்- குயின்டன் டி காக், நூருல் ஹசன்
- பேட்டர்- டேவிட் மில்லர், ரிலீ ரோசோவ், அஃபிஃப் ஹொசைன், லிட்டன் தாஸ்
- ஆல்-ரவுண்டர்- ஷகிப் அல் ஹசன், ஐடன் மார்க்ரம்
- பந்துவீச்சாளர்- தஸ்கின் அகமது, ககிசோ ரபாடா, வெய்ன் பார்னெல்