ஐசிசி விதியை மீறிய ஷோரிஃபுல் இஸ்லாம்!

Updated: Sun, Aug 08 2021 14:05 IST
Image Source: Google

வங்கதேசம் - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் தாக்காவில் நடைபெற்று வருகிறது. 

இத்தொடரில் இதுவரை நடைபெற்றுள்ள 4 போட்டிகளில் வங்கதேசம் அணி மூன்றில் வெற்றிபெற்று டி20 தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இருப்பினும் நேற்று நடைபெற்ற 4ஆவது டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றியைப் பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டி20 போட்டியின் போது வங்கதேச அணி வேகப்பந்து வீச்சாளர் ஷோரிஃபுல் இஸ்லாம் ஐசிசி நடத்தை விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

ஆட்டத்தின் 18ஆவது ஓவாரை வீசிய ஷோரிஃபுல் இஸ்லாம், மிட்செல் மார்ஷின் விக்கெட்டை வீழ்த்தி, சர்ச்சைகுறிய முறையில் வார்த்தைகளை பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது ஐசிசியின் நடத்தை விதி 2.5 படி குற்றமாகும். மேலும் ஷோரிஃபுல் மீதான குற்றச்சாட்டை போட்டி நடுவரும் உறுதிசெய்துள்ளார்.

இதையடுத்து ஐசிசி விதியை மீறிய குற்றத்திற்காக ஷோரிஃபுல் இஸ்லாமிற்கு போட்டி கட்டணத்திலிருந்து 50 விழுக்காடு அபராதம் விதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை