தென் ஆப்பிரிக்கா vs இலங்கை டெஸ்ட் தொடர்; இரு அணிகளும் அறிவிப்பு!

Updated: Tue, Nov 19 2024 21:17 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணிக்கு எதிரான இந்த டி20 தொடரை 3-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் அந்த அணி மீதான விமர்சனங்களும் அதிகரித்துள்ளன. 

இதனையடுத்து தென் ஆப்பிரிக்க அணி இலங்கை அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தவகையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 24ஆம் தேதி டர்பனிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 5ஆம் தேதி கிங்ஸ்மீத்திலும் நடைபெற்றவுள்ளது. மேலும் இத்தொடருக்கான இலங்கை அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது. 

அதன்படி தனஞ்செயா டி சில்வா தலைமையிலான இந்த அணியில் பதும் நிஷங்கா, திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம போன்ற வலுவான பேட்டர்களும், லஹிரு குமார, அசித்த ஃபெர்னாண்டோ, கசுன் ராஜித, மிலன் ரத்நாயக்க, பிரபாத் ஜயசூரிய மற்றும் நிஷான் பெய்ரிஸ் உள்ளிட்ட பந்துவீச்சாளர்களும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளன.

இந்நிலையில் இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இதில் காயம் காரணமாக வங்கதேச டெஸ்ட் தொடரை தவறவிட்ட டெம்பா பவுமா, காயத்தில் இருந்து மீண்டதுடன் முழு உடற்தகுதியை எட்டி அணிக்கு திரும்பியுள்ளார். மேற்கொண்டு இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் அவர் நியமிக்கப்பட்டுள்ளார். 

 

மேற்கொண்டு இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் ஜெரால்ட் கோட்ஸ் மற்று மார்கோ ஜான்சென் ஆகியோரும் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்கொண்டு இந்த அணியில் காகிசோ ரபாடா, வியான் மில்டர், டேன் பீட்டர்சன், ஐடன் மார்க்ரம், டிரிஸ்டன் ஸ்டப்ஸ் உள்ளிட்டோரும் தங்கள் இடங்களை தக்கவைத்துள்ளனர். அதேசமயம் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் லுங்கு இங்கிடி இத்தொடரில் இருந்து விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணி: டெம்பா பவுமா (கே), டேவிட் பெடிங்ஹாம், ஜெரால்ட் கோட்ஸி, டோனி டி ஸோர்ஸி, மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், ஐடன் மார்க்ராம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன்.

Also Read: Funding To Save Test Cricket

இலங்கை டெஸ்ட் அணி; தனஞ்செயா டி சில்வா (கேப்டன்), பதும் நிஷங்கா, திமுத் கருணாரத்னே, தினேஷ் சண்டிமல், ஏஞ்சலோ மேத்யூஸ், குசல் மெண்டிஸ், காமிந்து மெண்டிஸ், ஒஷாதா ஃபெர்ணாண்டோ, சதீரா சமரவிக்ரமா, பிரபாத் ஜெயசூர்யா, நிஷான் பெய்ரிஸ், லசித் எம்புல்டேனியா, மிலன் ரத்னநாயகே, அசிதா ஃபெர்ணாண்டோ, விஷ்வா ஃபெர்ணாண்டோ, லஹிரு குமாரா, கசுன் ரஜிதா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை