டி காக் விலகியது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது - டெம்பா பவுமா!

Updated: Wed, Oct 27 2021 11:47 IST
Image Source: Google

இனவெறிக்கு எதிராக இனி டி20 உலகக்கோப்பை தொடரின் ஒவ்வொரு போட்டி தொடங்கும் முன்பும் தென் ஆப்பிரிக்க அணியினர் முழங்காலிட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் காவலர் டெரிக் செவின், அமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் ஏதோ திருடிவிட்டார் எனக் கருதி அவரின் கழுத்தில் முழங்காலை மடக்கி அமர்ந்து கொலை செய்தார். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்து எதிர்ப்பலைகளை உருவாக்கியது, கண்டனத்தை எழுப்பியது. இனவெறிக்கு எதிராக மற்றொரு போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலை இந்தச் சம்பவம் உருவாக்கிவிட்டதாகக் கருத்துகள் பரவின.

கறுப்பினத்தவர்கள் மட்டுமின்றி யாருமே இனரீதியாக ஒதுக்கப்படக் கூடாது என்பதற்கு ஆதரவாக விளையாட்டு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியினர் முழங்காலிட்டு, கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாகவும், இனவெறிக்கு எதிராகவும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் இனவெறிப் பிரச்சினையாலே கிரிக்கெட் வாழ்க்கையை இழந்த தென் ஆப்பிரிக்காவும் இனவெறிக்கு எதிராகக் களமிறங்கியுள்ளது. இனிவரும் போட்டிகள் அனைத்திலும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் போட்டி தொடங்கும் முன் முழங்காலிட்டு இனவெறிக்கு எதிராக ஆதரவு தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய போட்டியிலிருந்து தென் ஆப்பிரிக்காவின் டி காக் திடீரென விலகிய விவகாரம் தற்போது பெரும் விவாதமாக மாறியுள்ளது. ஏனெனில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த போட்டியில் டி காக் விளையாடவில்லை என்று கூறினார். 

ஆனால் அவர் நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த உலகக் கோப்பை போட்டிகள் துவங்கும் முன்னர் எந்த அணி விளையாடினாலும் மைதானத்தில் மண்டியிட்டு ஒரு கை தூக்கி இனவெறிக்கு எதிரான தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அனைத்து அணி வீரர்களும் போட்டிக்கு முன்பு மண்டியிட்டு “Black Lives Matter” விவகாரத்திற்கு ஆதரவு தெரிவித்து வரும் வேளையில் டி காக் அந்த செயலுக்கு உடன்படவில்லை என்று தெரிகிறது.

இந்நிலையில் நேற்றைய போட்டிக்கு பிறகு பேசிய தென் ஆப்பரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா, “போட்டி தொடங்கும் முன் டி காக் விளையாடவில்லை என்று தெரிவித்தது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏனெனில் அவர் அணியின் மூத்த வீரர் மற்றும் அனுபவம் வாய்ந்தவரும் கூட.

Also Read: டி20 உலகக் கோப்பை 2021

இருப்பினும் அவரது எண்ணங்களை மதிக்க வேண்டும். மேலும் அவர் எங்கள் அணியின் ஒரு வீரராவார். அதனால் அவரக்கு எப்போதும் நாங்கள் எங்கள் ஆதவரைத் தெரிவிப்போம்” என்று கூறியுள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை