பிபிஎல் 2022: நாக் அவுட் சுற்றுக்குள் நுழைந்தது அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்!

Updated: Fri, Jan 21 2022 17:15 IST
Image Source: Google

பிக் பேஷ் லீக் டி20 தொடரின் 11ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்று ஆட்டத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் - அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. 

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஸ்டிரைக்கர்ஸ் அணி அலெக்ஸ் கேரி - மேத்யூ ஷார்ட் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் காரணமாக 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்களைச் சேர்த்தது. 

இதில் அதிகபட்சமாக மேத்யூ ஷார்ட் 88 ரன்களையும், அலெக்ஸ் கேரி 67 ரன்களையும் சேர்த்தனர். ஹரிகேன்ஸ் அணி தரப்பில் ரிலே மெரிடித், தாமஸ் ரோஜர்ஸ் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். 

இதையடுத்து இலக்கை துரத்திய ஹரிகேன்ஸ் அணியில் பென் மெக்டர்மோட், மேத்யூ வேட் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

அதன்பின் ஜோடி சேர்ந்த கலெப் ஜெவெல் - டி ஆர்சி ஷார்ட் இணை அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தியது. இதில் ஷார்ட் அரைசதம் கடந்தார். 

பின்னர் 35 ரன்னில் ஜெவெல் ஆட்டமிழக்க, 56 ரன்களுடன் டி ஆர்சி ஷார்ட்டும் 56 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த வீரர்கள் எதிரணி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியால் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேறினர். 

இதனால் 19.4 ஓவர்களிலேயே ஹரிகேன்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 166 ரன்களை மட்டுமே சேர்த்தது. அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி தரப்பில் கேப்டன் பீட்டர் சிடில் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். 

இதன்மூலம் அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ் அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணியை வீழ்த்தி, நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை