மகளிர் ஆசிய கோப்பை 2022: பிசிசிஐ-யிடமிருந்து இந்திய அணிக்கு சுற்றரிக்கை!
ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் 15ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. இந்தியா, பாகிஸ்தான் உட்பட மொத்தம் 7 நாடுகள் பங்கேற்கும் இந்த டி20 கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடைபெறவிருக்கிறது.
ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி, கோப்பையை வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆனால் சமீபத்தில் நடந்து முடிந்த இங்கிலாந்து டி20 தொடரில் இந்திய மகளிர் அணி 2 - 1 என சொதப்பியது. இதனால் ஆசிய கோப்பையில் அனைத்து தவறுகளை சரி செய்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்திய மகளிர் அணிக்கு பிசிசிஐ-யிடம் இருந்து சுற்றறிக்கை சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இந்திய ஆடவர் அணி சிறப்பான ஃபார்மில் இருந்த போதும், ஆசிய கோப்பையில் பந்துவீச்சு சரியில்லாமல் இறுதிப்போட்டிக்கு கூட செல்லவில்லை. எனவே மகளிர் அணியின் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் எந்தவித ரிஸ்க்கும் எடுக்கக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பைகான இந்திய: ஹர்மன்ப்ரீத் கவுர், ஸ்மிருதி மந்தனா, தீப்தி சர்மா, ஷஃபாலி வெர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், சபினேனி மேக்னா, ரிச்சா கோஷ், ஸ்னேஹ்ரானா, தயாலன் ஹேமலதா, மேஹ்னா சிங், ரேனுகா தாகூர், பூஜா வஸ்ட்ராக்கர், ராஜேஸ்வரி கெயிக்வாட், ராதா யாதவ், கே.பி.நாவ்கிர்