ஐபிஎல் 2025: உமிழ்நீர் தடையை நீக்கியது பிசிசிஐ - தகவல்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளை மறுநாள் தொடங்க இருக்கும் நிலையில், இதற்கான வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக இன்று நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்தவகையில், வீரர்கள் உமிழ்நீரை பயன்படுத்துவதற்கான தடையை பிசிசிஐ நீக்கியுள்ளது. முன்னதாக கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) உமிழ்நீரை தடை செய்தது. ஆனால் அதன்பின் 2022 ஆம் ஆண்டில், ஐசிசி உமிழ்நீரைப் பயன்படுத்துவதற்கு முழுமையான தடையை விதித்துள்ளது. இந்நிலையில் தான் பிசிசிஐ இந்த விதியை ஐபிஎல் தொடரில் நீக்கியுள்ளது.
இதுதவிர்த்து ஐபிஎல் போட்டியில் இரண்டாவது பந்தை இரண்டாவது இன்னிங்ஸின் 11வது ஓவருக்குப் பிறகு எடுக்கலாம். இந்த விதியின் முக்கிய நோக்கம், இரவு நேரப் போட்டிகளை பெரும்பாலும் பாதிக்கும் பனியின் விளைவைக் குறைப்பதாகும். இந்த விதியை அறிமுகப்படுத்துவது, டாஸ் வெல்லும் கேப்டனுக்கு எந்த நன்மையும் ஏற்படுவதற்கான வாய்ப்புகளைக் குறைக்கும் என்ற் கூறப்பகிறது.
மேலும், பந்தை மாற்றும் விதியில், பிசிசிஐ இந்த முடிவை நடுவர்களின் விருப்பப்படி விட்டுள்ளது. பந்து மாற்றப்பட வேண்டுமா இல்லையா என்பதை நடுவர்கள்தான் முடிவு செய்வார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பனியின் இருப்பைப் பொறுத்து அவர்கள் முடிவு செய்வார்கள். இதன் விளைவாக, இந்த விதி முக்கியமாக இரவுப் போட்டிகளுக்குப் பொருந்தும், அதேசமயம் பிற்பகல் போட்டிகளில் இந்த விதி பயன்படுத்தப்பட வாய்ப்பில்லை.
Also Read: Funding To Save Test Cricket
மேற்கொண்டு இந்த கூட்டத்தில் இம்பாக்ட் பிளேயர் விதி குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த விதியின் மூலம் கடந்தாண்டு 250 க்கும் அதிகமான ரன்கள் அடிக்கப்பட்டன. இதனால், பந்துவீச்சாளர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். இதனால் இந்த விதியானது மாற்றப்பட வாய்ப்புதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2027 ஆம் ஆண்டு வரை இம்பாக்ட் பிளேயர் விதி தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.