பிசிசிஐயின் தலைமை மருத்துவர் பதவியை ராஜினாமா செய்த அபஜித் சால்வி!

Updated: Sat, Dec 18 2021 21:20 IST
Image Source: Google

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் கடந்த ஒரு மாதமாகவே பல்வேறு குழப்பங்களும், சர்ச்சைகளும் நிலவி வருகின்றன. கேப்டன் பதவி நீக்கம், ஐபிஎல் புதிய அணிகளுக்கு சிக்கல், பழைய அணிகளின் புகார் என பல பிரச்சினைகளை அடுத்தடுத்து சந்தித்து வருகிறது.

இந்த நிலையில், பிசிசிஐயில் 9 வருடமாக பணிபுரிந்த முக்கிய நிர்வாகி தனது பதவியை ராஜினாமா செய்தார். இது பிசிசிஐக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. 

பிசிசிஐயின் தலைமை மருத்துவராக இருந்தவர் அபஜித் சால்வி, இவர் கடந்த 9 வருடமாக பிசிசிஐயில் பணிபுரிந்து வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் சிறப்பு மருத்துவராக பல வெளிநாட்டு சுற்றுப் பயணத்திற்கும் செல்வார். தற்போது கரோனா அதிகம் உள்ள தென் ஆப்பிரிக்கா தொடருக்கு அபஜித் சால்வி செல்லவில்லை.

நியூசிலாந்து தொடர் முடிந்தவுடன் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மாற்று ஏற்பாடாக வேறொரு மருத்துவமரை பிசிசிஐ அனுப்பியுள்ளது. 

மேலும் 16 வயதுக்குட்பட்டவர்களுக்காக பிசிசிஐ நடத்தும் விஜய் மெர்சண்ட் கோப்பை, இந்திய கிரிக்கெட்டில் முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் சிறப்பாக செயல்படுபவர்களே அடுத்த கட்டத்திற்கு செல்வார்கள். இதனால் வீரர்களின் வயதை , அவர்களது எலும்புகளின் அடர்த்தியை வைத்து ஆய்வு செய்து வயது தகுதிச் சான்றிதழ் அளிக்கும் முக்கிய பொறுப்பையும் சால்வி செய்து வந்தார்.

மேலும் கரோனா காலத்தில் வீரர்களுக்கான பயோ பபுள் முறையை உருவாக்கியது. வீரர்களுக்கு ஊக்க மருந்து பரிசோதனை நடத்தி முடிவுகளை கூறவது, எந்த மருந்துகளை பயன்படுத்த வேண்டும் என வீரர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது என பல பணிகளை சாலவி மேற்கொண்டார். தற்போது சால்விக்கு பதில் வேறு மருத்துவர் இல்லாததால் பிசிசிஐ அடுத்தது என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து போய் உள்ளது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை