அணி தேர்வால் சர்ச்சையில் சிக்கிய பிசிசிஐ; கொந்தளிப்பில் ரசிகர்கள்!

Updated: Thu, Nov 24 2022 15:00 IST
BCCI Not excluded sanju samson and suryakumar yadav in India squad of bangladesh tour (Image Source: Google)

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணியுடனான டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இதனைத்தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நாளை முதல் ஆக்லாந்தில் தொடங்கவுள்ளது. இந்த தொடரே இன்னும் முடிவடையாத சூழலில் அடுத்த தொடருக்கான பிரச்சினை கிளம்பியுள்ளது.

இந்திய அணி அடுத்ததாக வரும் ஜனவரி மாதத்தில் வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அங்கு இரு அணிகளுக்கும் இடையே 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதும், அதில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

ரவீந்திர ஜடேஜா மற்றும் யாஷ் தயால் ஆகிய இருவரும் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகினர். அணியில் ஸ்பின்னர்களும் இருப்பதால், நல்ல ஃபார்மில் இருக்கும் சூர்யகுமார் யாதவ் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு தரப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக சூர்யகுமார் யாதவ் நிச்சயம் இடம்பெறுவார் என ரசிகர்கள் நம்பினர்.

இந்நிலையில் இவர்கள் ஒதுக்கப்பட்டதற்கு காரணம் அவர்கள் பிராமிணர்கள் இல்லை என்பது தான் என ரசிகர்கள் பரபரப்பை கிளப்பியுள்ளனர். அதாவது இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு வரும் வீரர்களில் பெரும்பாலானோர் பிராமிணர் சமுதாயத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர், மற்ற சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் சஞ்சு சாம்சன் மற்றும் சூர்யகுமார் ஒதுக்கப்பட்டுள்ளனர். இந்த முறைகேடு பிசிசிஐ-ல் பல ஆண்டுகளாக இருந்து வருவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

சூர்யகுமார்ய்க்கு டி20இல் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கிறது தான். ஆனால் அவருக்கு அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. ஐபிஎல் தொடரில் பல சீசன்களாக சிறப்பாக விளையாடி வந்த அவருக்கு வாய்ப்பே கிடைக்கவில்லை என அதிருப்தி எழுந்தது. அதன்பின்னர் தான் இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது என்பது அனைவரும் அறிந்ததே. எனினும் அணியின் காம்பினேஷனுக்கு ஏற்ப தான் முடிவுகள் எடுக்கப்படுவதாக பிசிசிஐ விளக்கம் தருவது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை