ஐபிஎல் 2023: டிசம்பரில் மினி ஏலம் - பிசிசிஐ தகவல்!

Updated: Fri, Sep 23 2022 20:10 IST
Image Source: Google

மெகா ஏலத்தின் மூலம் கோலகலமாக நடைபெற்ற ஐபிஎல் தொடர் விறுவிறுப்புக்கு பஞ்சம் இன்றி நடைபெற்றது. இந்நிலையில் அடுத்தாண்டுக்கான ஐபிஎல் தொடர் குறித்தும் அதன் ஏலம் குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் அணிகளும் சிறிய மாற்றத்தை செய்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக மினி ஏலம் நடத்தப்படும். இதில் ஒவ்வொரு அணியும் தங்களது வீரர்களை ட்ரேடிங் மூலம் கைமாற்றிக்கொள்ளலாம். இல்லையெனில் புதிய வீரர்களை வாங்கிக்கொள்ளலாம். அந்தவகையில் அடுத்த மினி ஏலம் வரும் டிசம்பர் 16ஆம் தேதியன்று நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த மினி ஏலத்தின் தேதி கிட்டத்தட்ட உறுதியான போதும், எந்த இடத்தில் நடைபெற போகிறது என்பது குறித்த எந்த தகவலும் வெளிவரவில்லை. கடந்தாண்டு ஒவ்வொரு அணிக்கும் ரூ.90 கோடி செலவளித்துக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் அடுத்தாண்டிற்கு ரூ. 5கோடி உயர்த்தி ரூ.95 கோடி பயன்படுத்திக்கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.

மினி ஏலத்தின் போது சிஎஸ்கே, பஞ்சாப் உட்பட பல அணிகளில் இருந்தும் வீரர்கள் ட்ரேடிங் செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் ராகுல் திவேத்தியா மற்றும் சாய் கிஷோர் ஆகியோரை தரும்படி பிரபல அணி கேட்டதாகவும் அதற்கு குஜராத் அணி மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தாண்டு ஐபிஎல் தொடரில் மற்றொரு சர்ஃப்ரைஸும் ரசிகர்களுக்கு காத்துள்ளது. அடுத்த ஐபிஎல் தொடர் மீண்டும் பழைய ஃபார்மட்டில் நடைபெறும் என அறிவித்துள்ளனர். அதாவது 10 அணிகளும் தங்களது சொந்த ஊரின் மைதானங்களில் விளையாட முடியும். இது சென்னை ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை