ஊடகங்களிடம் இருந்து சில நாட்கள் தப்பிக்கவே பொய் சொன்னென் - பென் ஸ்டோக்ஸ் ஓபன் டாக்!

Updated: Thu, Sep 14 2023 14:43 IST
Image Source: Google

இங்கிலாந்து அணி 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை மற்றும் கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை ஆகியவற்றை வெல்ல முக்கியக் காரணமாக அமைந்தவர் பென் ஸ்டோக்ஸ். ஆனால் கடந்த ஆண்டு திடீரென ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்திருந்தார்.

அண்மையில் ஆஷஸ் தொடரின் போது ஒருநாள் உலகக்கோப்பை விளையாடுவீர்களா என்ற கேள்விக்கு கூட, எனது ஓய்வு முடிவை மாற்றிக் கொள்ள விரும்பவில்லை என்று தெரிவித்தார். ஆனால் இங்கிலாந்து உலகக்கோப்பை அணி தேர்வு செய்யப்பட்ட போது, பென் ஸ்டோக்ஸின் பெயரும் சேர்க்கப்பட்டது. அதற்கு முன், இங்கிலாந்து கேப்டன் பட்லர், ஸ்டோக்ஸ் உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான் 3ஆவது ஒருநாள் போட்டியில் பென் ஸ்டோக்ஸ் அபார சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். 76 பந்துகளில் சதம் விளாசி பென் ஸ்டோக்ஸ், 124 பந்துகளில் 182 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதன் மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில், அதிகபட்ச ஸ்கோரை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார்.

இந்த நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டுக்கு கம்பேக் கொடுத்தது பற்றி பென் ஸ்டோக்ஸ் பேசுகையில், “அண்மை காலமாக அணி நிர்வாகத்திடம் இருந்து எனக்கு ஏற்பட்டுள்ள முழங்கால் காயம் குறித்து அதிக கேள்விகளை எதிர்கொண்டேன். தற்போது அதுகுறித்து கவலை வேண்டாம் என்று கூறிவிட்டேன். நிச்சயம் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பையை விளையாடுவேன் என்பது நன்றாகவே தெரியும்.

ஊடகங்களிடம் இருந்து சில நாட்கள் தப்பிக்கவே பொய் சொன்னென். இன்றைய பேட்டிங்கை பொறுத்த வரை, எனது சாதனையை ஸ்பீக்கரில் சொல்லும் வரை நான் சாதனை படைத்ததே தெரியாது. ஆனால் சாதனை படைத்ததை அறிந்த அடுத்த பந்திலேயே ஆட்டமிழந்துவிட்டேன். இனி ஆட்டத்தில் மட்டும் கவனம் கொள்ள வேண்டும்.

அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் 5 மற்றும் 6 ஆகிய பேட்டிங் வரிசையில் தான் அதிகம் விளையாடி இருக்கிறேன். தற்போது முழுமையான பேட்ஸ்மேனாக நம்பர் 4 வரிசையில் களமிறங்குகிறேன். அதனால் மனநிலையில் பெரியளவில் மாற்றம் செய்யப் போவதில்லை. கடந்த 18 மாதங்களில் ஒவ்வொரு நாளும் பந்துவீசலாமா வேண்டாமா என்ற எண்ணம் ஓடிக் கொண்டே இருக்கும். ஆனால் தற்போது அதுகுறித்துக் கவலைக் கொள்ளப் போவதில்லை” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை