England Playing XI: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) ஆல்ரவுண்டர் ஜேமி ஓவர்டன் இடம் பெற்றுள்ளார்.

Advertisement

தென் ஆப்பிரிக்க அணி தற்சமயம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி செப்டம்பர் 7ஆம் தேதி சௌத்தாம்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Advertisement

இதில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெறும் பட்சத்தில் தொடரை முழுமையாக கைப்பற்றும். அதேசமயம் இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றியைத் தேட முயற்சி செய்யும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்த நிலையில் இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன் இடம்பிடித்துள்ளார். இதன் காரணமாக சாகிப் மஹ்மூத் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முன்னதாக முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஓவர்டனுக்கு இடம் கிடைக்கவில்லை, ஆனால் இப்போது அவர் தொடரின் கடைசி போட்டிக்கான பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் இங்கிலாந்து அணிக்காக 6 இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தவிர, இந்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அணியில் கேப்டன் ஹாரி புரூக், ஜோ ரூட், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற பெரிய வீரர்கள் உள்ளனர். தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் தென்னாப்பிரிக்காவிடம் இங்கிலாந்து தோல்வியடைந்துள்ளது. முதல் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

Also Read: LIVE Cricket Score

இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன்: ஜேமி ஸ்மித், பென் டக்கெட், ஜோ ரூட், ஹாரி ப்ரூக் (கேப்டன்), ஜோஸ் பட்லர் (wk), ஜேக்கப் பெத்தேல், வில் ஜாக்ஸ், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், அடில் ரஷீத்.

Advertisement

About the Author

Tamil Editorial
Tamil Editorial Read More
Latest Cricket News