ஆஷஸ் தொடருக்கு முன் இங்கிலாந்து வீரர் எடுத்த அதிரடி முடிவு!
Jamie Overton Indefinite Break Red-Ball Cricket: இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் ஜேமி ஓவர்டன், டெஸ்ட் மற்றும் முதல்-தர கிரிக்கெட் போட்டிகளில் இருந்து காலவரையற்ற விடுப்பு எடுப்பதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர்களில் ஒருவர் ஜேமி ஓவர்டன். இவர் இங்கிலாந்து அணிக்காக கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகமான நிலையில், 2 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 12 டி20 போட்டிகளில் விளையாடி 22 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிலும் குறிப்பாக அவர் இங்கிலாந்து அணிக்காக கடைசியாக ஓவலில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக விளையாடினார்.
இந்த நிலையில் ஒருநாள் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்த அவர், டெஸ்ட் மற்றும் உள்ளூர் போட்டிகளில் இருந்து காலவரையின்றி விடுப்பு எடுப்பதாக அறிவித்துள்ளார். இதனால் எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2025-26 ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகியுள்ளது. இது இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பேசிய அவர், “அதிகம் யோசித்த பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விடுப்பு எடுக்கும் முடிவை எடுத்துள்ளே. ஏனெனில் தொடர்ச்சியாக விளையாடும் சூழ்நிலையில் மூன்று வடிவங்களிலும் சிறப்பாக செயல்படுவது சாத்திய மில்லை. எனவே ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் முழுமையான கவனத்தை செலுத்தும் முயற்சில் நான் இந்த முடிவை எடுத்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.
இதற்கு முன் இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஆஸ்திரேலியாவின் கிளென் மேக்ஸ்வெல் உள்ளிட்டோரு பணிச்சுமை காரணங்களால் கிரிக்கெட்டில் இருந்து விடுப்பு எடுத்துள்ள நிலையில், அவர்கள் வரிசையில் தற்சமயம் ஜேமி ஓவர்டன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து மட்டும் காலவரையற்ற விடுப்பை எடுத்திருப்பது இங்கிலாந்து அணி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read: LIVE Cricket Score
ஏனெனில் எதிவரும் நவம்பர் மதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி 5 போட்டிகளை உள்ளடக்கிய ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட இருக்குகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் ஜேமி ஓவர்டனின் இந்த முடிவில் இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதனால் அவரது இடத்தில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.