டி20 கிரிக்கெட்டில் சாதனைப் படைக்க காத்திருக்கும் புவனேஷ்வர் குமார் - விவரம் இதோ!
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியோடு வெளியேறிய இந்திய அணி, அடுத்ததாக நியூசிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க உள்ளது. நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்து அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது.
ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்கு நியூசிலாந்து தொடரில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளதால், டி.20 தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ஷிகர் தவானும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதே போல் பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டிற்கும் இந்த தொடரில் இருந்து ஓய்வு கொடுக்கப்பட்டு, விவிஎஸ் லக்ஷ்மண் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதலில் நடைபெறும் டி20 தொடரின் முதல் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில், இந்த தொடரின் மூலம் இந்திய அணியின் சீனியர் வீரரான புவனேஷ்வர் குமார் மிகப்பெரும் சாதனை ஒன்றை படைக்க உள்ளது தற்போது தெரியவந்துள்ளது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் புவனேஷ்வர் குமார் 4 விக்கெட் எடுத்தால், டி20 போட்டிகளில் ஒரே ஆண்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் இடம்பிடிப்பார்.
நடப்பு ஆண்டில் இதுவரை 30 டி20 போட்டிகளில் விளையாடி அதில் 36 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ள புவனேஷ்வர் குமார், நியூசிலாந்து தொடரில் 4 விக்கெட்டுகள் எடுத்தால் ஒரே ஆண்டில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பார்.அயர்லாந்து அணியின் ஜோஸ்வா லிட்டில் 39 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளதே இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இதனை முறியடிக்க புவனேஷ்வர் குமாருக்கு நல்ல வாய்ப்பு தற்போது கிடைத்துள்ளது.