ஐசிசியின் விதிமுறைகள் ஆபத்தை ஏற்படுத்துகின்றன - வாசிம் ஜாஃபர்!

Updated: Tue, Mar 08 2022 16:09 IST
Image Source: Google

டெஸ்ட் போட்டியில் ஒரு நாளில் 90 ஓவர் வீசி இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் அதற்கு குறைவாக வீசியிருந்தால் கேப்டனுக்கு அபராதம் விதிக்கப்படும். மேலும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சம்பந்தப்பட்ட அணி வாங்கிய புள்ளிகள் குறைக்கப்படும்.

இந்த நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள வாசிம் ஜாஃபர், “ஐசிசியின் இந்த நடவடிக்கை சுத்த பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது. டெஸ்ட் போட்டிகள் தற்போது எல்லாம் 4 நாட்களுக்குள் முடிந்துவிடுவதால், ஓவர் குறைவாக வீசினால் என்ன தவறு.

இதன் மூலம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளில் குறைப்பதால் அது அணிக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்று வாசிம் ஜாபர் குற்றஞ்சாட்டியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஆபத்து ஓவர்ரேட்டால் வரவில்லை என்பதை ஐசிசி புரிந்து கொள்ள வேண்டும்.

உண்மையான ஆபத்தே பந்துவீச்சுக்கு சாதகம் இல்லாத ஆடுகளத்தால் தான் உள்ளது. ஆடுகளம் அப்படி தயாரிக்கப்பட்டால் கிரிக்கெட் விரைவில் செத்துவிடும்” என்று கூறியுள்ளார். வாசிம் ஜாபரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

 

போட்டிகள் முன்பே முடிந்த பிறகும் இந்தியாவின் புள்ளிகள் ஓவர் ரேட் விவகாரத்தில் குறைக்கப்பட்டது. இது இந்தியாவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதே போன்று பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து வரும் ஆஸ்திரேலியா, பாகிஸ்தானுக்கு இடையிலான முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸ் முடிவதற்குள் 4 நாட்கள் ஆகிவிட்டது.இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை