பார்வையற்றோருக்கான உலகக்கோபை தொடரில் ஹாட்ரிக் வெற்றியைப் பதிவுசெய்தது இந்தியா!

Updated: Wed, Dec 14 2022 09:04 IST
Image Source: Google

பார்வையற்றோருக்கான டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 5ஆம் தேதி தொடங்கிய இந்த தொடர் வரும் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆஸ்திரேலியா, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, இலங்கை மற்றும் இந்திய அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.

மொத்தமாக 24 போட்டிகள் இந்த தொடரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்த தொடரில் பங்கேற்கவில்லை. இதுவரை 13 போட்டிகள் நடந்துள்ளன.

இதில் நேற்று நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் நேபாளம், ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் போன்ற அணிகளை அடுத்தடுத்த போட்டிகளில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது. 

மேலும் இந்த வேற்றியின் மூலம் இந்திய அணி 6 புள்ளிகளை பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் வரிசையாக 4 வெற்றிகளை பதிவு செய்துள்ள இலங்கை அணி உள்ளது.

இதற்கு முன்னர் 2012 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பை தொடர் நடத்தப்பட்டுள்ளது. அந்த இரண்டிலும் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை