மேட்ச் பிக்ஸிங் குறித்து பதிவிட்ட பிராண்டன் டெய்லர்!

Updated: Mon, Jan 24 2022 16:31 IST
Brendan Taylor 'Not A Cheat' After ICC Decides To Impose 'Multi Year Ban' For Not Reporting Fixing (Image Source: Google)

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமாக திகழ்பவர் பிரெண்டன் டெய்லர். இவர் கடந்தாண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்தார். 

இந்நிலையில் இந்திய தொழிலதிபர் ஒருவர் தன்னை மேட்ச் ஃபிக்சிங்கில் ஈடுபட கட்டாயப்படுத்தினார் என்று தனது சமூக வலைதள பதிவின் மூலம் பிரெண்டன் டெய்லர் அதிர வைக்கிறார்.

ட்விட்டரில் பகிரப்பட்ட ஒரு விரிவான பதிவில் பிரெண்டன் டெய்லர் இந்த குற்றச்சாட்டை முன்வைக்கிறார். சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டிருக்கும் இந்த குற்றச்சாட்டு மிகவும் நீண்டதாக இருக்கிறது.

2019 அக்டோபரில் ஸ்பான்சர்ஷிப் விவரங்கள் மற்றும் ஜிம்பாப்வேயில் டி 20 போட்டியின் சாத்தியக்கூறுகளைப் பற்றி விவாதிக்க ஒரு தொழிலதிபரால் இந்தியாவுக்குச் செல்ல தான் அழைக்கப்பட்ட விதத்தைப் பற்றி டெய்லர் விரிவாக எழுதியுள்ளார்.

இந்தப்பதிவில் மேட்ச் பிக்ஸிங்காக அவர் அணுகப்பட்டார் என்பதும், இந்தியத் தொழிலதிபருக்கு இதில் தொடர்பு இருக்கிறது என்பதும் குற்றச்சாட்டின் சாரம்சமாக அமைந்துள்ளது,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள்  விக்கெட் கீப்பர் பிரெண்டன் டெய்லர்,  இந்திய தொழிலதிபர் ஒருவருக்கு எதிராக அதிர்ச்சியூட்டும் கூற்றுகளை முன்வைத்துள்ளார். தான் அந்த தொழிலதிபரின் பெயரை குறிப்பிட விரும்பவில்லை என்றும் சொல்கிறார்.

“நான் 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு சுமையை சுமந்து வருகிறேன், அது என்னை மிகவும் இருண்ட இடங்களுக்கு அழைத்துச் சென்றது மற்றும் எனது மன ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. நான் சமீபத்தில் தான் எனது கதையை நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளத் தொடங்கினேன், முதலில் அது வெட்கமாகவும் பயமாகவும் இருந்தது” என்று அவர் தெரிவிக்கிறார்.

 

35 வயதான டெய்லர் கடந்த ஆண்டு சர்வதேச ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். அவர் இந்தியாவில் தங்கியிருந்த கடைசி நாளில் மேற்கூறிய தொழிலதிபர் மற்றும் அவரது சகாக்களால் இரவு உணவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு விஷயங்கள் வியத்தகு முறையில் மாறியது.

இரவு விருந்தின் போது போதைப்பொருள் எடுக்க தூண்டிவிடப்பட்டதாகவும், அதன் காணொளி எடுக்கப்பட்டதாகவும் டெய்லர் குற்றம் சாட்டினார். தான், புக்கிகளால் அணுகப்பட்டதை ஒப்புக்கொண்ட பிரெண்டன் டெய்லர், இதனால் ஐசிசி அவருக்கு பல ஆண்டு தடை விதிக்கும் என்றும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை