டி20 உலகக்கோப்பை: இந்திய அணி கோப்பையை வெல்லும் - பிரெட் லீ!

Updated: Fri, Oct 22 2021 13:47 IST
Brett Lee's bold prediction for India stars in T20 World Cup (Image Source: Google)

இந்தியாவில் நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது கரோனா வைரஸ் அச்சம் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் நடத்த ஐசிசி முடிவு செய்தது. ஏற்கனவே பிசிசிஐ இந்த நடப்பு ஐபிஎல் தொடரின் இரண்டாவது பாகத்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடித்த வேளையில் ஐசிசியும் கடந்த 17ஆம் தேதி இந்த உலக கோப்பை தொடரை வெற்றிகரமாக தொடங்கியது. தற்போது தகுதி சுற்று போட்டிகள் முடிவடைந்து நாளை சூப்பர்-12 போட்டிகள் துவங்க உள்ளன.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது ? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரெட் லீ இந்த டி20 தொடரை கைப்பற்ற போகும் அணி குறித்து ஐசிசி இணையதளத்தில் கட்டுரை ஒன்றை எழுதி உள்ளார்.

அந்த கட்டுரையில் அவர், “டி20 கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அதிகமாக சாதித்தது இல்லை. அதனை மாற்றுவதற்கு இதுவே சரியான நேரம் என்று நான் நினைக்கிறேன். ஆஸ்திரேலிய அணி இந்த முறை தங்களது ஆதிக்கத்தை ஆரம்பிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். ஆனால் இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து போன்ற வலுவான அணிகளுக்கு இடையே ஆஸ்திரேலியா கோப்பையை வெல்வது எளிதான கிடையாது.

ஆஸ்திரேலிய அணியில் நிறைய திறமையான வீரர்கள் உள்ளனர். குறிப்பாக டேவிட் வார்னர் முக்கிய வீரராக திகழ்ந்தார். அவர் ஐபிஎல் தொடரில் நடத்தப்பட்ட விதத்தால் அவருடைய நம்பிக்கை குறைந்து இருக்கலாம். ஆனால் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடும் போது அவர் முக்கியமான வீரராக நிச்சயமாக இந்த தொடரில் அவர் ஜொலிப்பார். என்னை பொருத்தவரை இந்த உலகக் கோப்பையை வெல்லும் வாய்ப்பில் முன்னணியில் இருப்பது இந்திய அணி தான்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஏனெனில் அவர்கள் டி20 கிரிக்கெட் அணியை சரியாக தேர்வு செய்துள்ளார்கள். அதுமட்டுமின்றி அணியில் தற்போது விளையாடும் அனைத்து வீரர்களும் திறமையான வீரர்கள் என்பதனால் மற்ற அணிகளை காட்டிலும் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு மிக அதிகம். அதோடு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரானது இந்திய வீரர்களுக்கு நல்ல பயிற்சியாக அமைந்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை