ஐபிஎல் 2023: சிஎஸ்கேவில் சாம் கரண்; பஞ்சாப் கிங்ஸில் பென் ஸ்டோக்ஸ்..!

Updated: Thu, Dec 22 2022 18:50 IST
Cameron Green goes for Rs 20cr in mock IPL Auction 2023! (Image Source: Twitter)

ஐபிஎல் 2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் மினி ஏலம் நாளை டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் தொடங்குகிறது. இதற்காக 10 ஐபிஎல் அணிகளும் கொச்சியில் முகாமிட்டு கடைசி கட்ட தயாரிப்பு பணியை நடத்துகிறது. இந்த நிலையில், ஐபிஎல் மினி ஏலத்தை ஓடிடியில் ஒளிபரப்பும் ஜியோ சினிமா, இன்று ஒரு மாதிரி ஏலத்தை நடத்தியது. இதில் பல முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்று வீர்களை தேர்வு செய்தனர்.

உண்மையான ஏலம் போலவே இது நடத்தப்பட்டது. இதில் எந்த வீரர்கள எவ்வளவு தொகைக்கு சென்றார்கள் என்பதை தற்போது காணலாம். இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரெய்னாவும், ஆர்சிபி மற்றும் கொல்கத்தா அணிக்காக கிறிஸ் கெயிலும், டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிக்காக ராபின் உத்தப்பாவும், மும்பை அணிக்காக கும்ப்ளேவும், பஞ்சாப் அணிக்காக மோர்கனும், ஹைதராபாத் அணிக்காக ஸ்காட் ஸ்டைரிசும், குஜராத் அணிக்காக முரளி கார்த்திக்கும், லக்னோ அணிக்காக ஆர்பி சிங்கும் களமிறங்கினர்.

இதில் முதல் செட்டில் இடம்பெற்ற வில்லியம்சனை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை. அவருடைய பேட்டிங் ஃபார்ம் காரணமாக இந்த முடிவு எடுத்ததாக குறிப்பிட்ட வீரர்கள் நாளையும் இதே நடைபெற வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்த பென் ஸ்டோக்ஸ் பெயர் வந்தது. ஸ்டோக்சை வாங்க சிஎஸ்கேவும் , பஞ்சாப்பும் மாதிரி ஏலத்தில் போட்டி போட்டனர்.

இறுதியாக 19 கோடி ரூபாய்க்கு ஸ்டோக்ஸை பஞ்சாப் அணி தட்டி தூக்கியது இதே போன்று சாம் கரண் பெயர் வந்தது. இதில் சிஎஸ்கே வின் ரெய்னா 19.5 கோடி ருபாயை செலவிட்டு சாம் கரணை ஏலத்தில் எடுத்தார். தென் ஆப்பிரிக்க வீரர் ரைலி ரூசோவை 6.5 கோடி ருபாய் கொடுத்து குஜராத் அணிக்காக முரளி கார்த்திக் எடுத்தார்.

இதே போன்று யாரும் எதிர்பாராத விதமாக 20 கோடி ரூபாய் கொடுத்து ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் கேமிரான் கிரீனை ஹைதராபாத் அணிக்காக மாதிரி ஏலத்தில் களமிறங்கிய ஸ்காட் ஸ்டைரிஸ் எடுத்தார். 8.5 கோடி ரூபாய் கொடுத்து மும்பை அணிக்காக ஓடியன் ஸ்மித்தையும், 7 கோடி கொடுத்து சிக்கந்தர் ராசாவையும் கும்ப்ளே ஏலத்தில் எடுத்தார். இதே போன்று மாயங் அகர்வாலை 6.2 கோடி ரூபாய் கொடுத்து ஹைதராபாத் அணி மாதிரி ஏலத்தில் எடுத்தது. ஜேசன் ஹோல்டரை 7 கோடி கொடுத்து பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது.

இதனிடையே , ஐபிஎல் மினி ஏலத்தின் விதிமுறைகள் என்ன? மினி ஏலம் எப்படி நடைபெறும் என்பது குறித்து ஐபிஎல் அணிகளிடம் விவரிக்கும் வகையில் பிசிசிஐயும் ஒரு மாதிரி ஏலத்தை நடத்தியது. இதில் 10 அணிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர். மினி ஏலம் என்பதால், விரைவாக நடத்தி முடிக்க அணிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், சிஎஸ்கே சார்பாக யார் பங்கேற்க போகிறார்கள் என்ற தகவல் வெளியாக வில்லை.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை