SA vs IND, 2nd Test: இந்தியாவை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா!

Updated: Thu, Jan 06 2022 21:41 IST
Image Source: Google

தென் ஆப்பிரிக்கா - இந்தியா அணிகளுக்கிடையிலான 2-வது டெஸ்ட் ஆட்டம் ஜோஹன்னஸ்பர்கில் நடைபெற்றது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 202 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 266 ரன்களும் எடுத்தது. தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்ஸில் 229 ரன்கள் எடுத்ததன் மூலம் இரண்டாவது இன்னிங்ஸில் 240 வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டன.

இதையடுத்து 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்திருந்தது.

மழை காரணமாக இன்றைய நான்காம் நாள் ஆட்டம் தொடங்க தாமதமானது. உணவு இடைவேளையும், தேநீர் இடைவேளையும் எடுக்கப்பட்டன.

பின்னர் ஆட்டம் தொடங்கியவுடன் கேப்டன் டீன் எல்கரும், ராசி வாண்டர் டூசனும் பாட்னர்ஷிப்பை தொடர்ந்தனர். இந்த பாட்னர்ஷிப்பை பிரிக்க முடியாததால், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு படிப்படியாகக் குறைந்தது.

3ஆவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்த நிலையில் டூசன் விக்கெட்டை முகமது ஷமி கைப்பற்றினார். இதனால், இந்தியாவுக்கு லேசான வாய்ப்பு உருவானது.

ஆனால், அதன்பிறகும் எல்கர் மற்றும் டெம்பா பவுமா மீண்டும் ஒரு பாட்னர்ஷிப் அமைத்தனர். இந்திய அணியால் மேற்கொண்டு விக்கெட்டை வீழ்த்தமுடியவில்லை.

இதனால் 67.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 243 ரன்கள் எடுத்த தென் ஆப்பிரிக்கா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த எல்கர் 96 ரன்களும், பவுமா 23 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம், 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 1-1 என சமநிலையில் உள்ளது.

அதேசயம் வாண்டரர்ஸ் மைதானத்தில் இந்தியாவை தென் ஆப்பிரிக்கா வீழ்த்துவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை