இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நிதிஷ் குமார் ரெட்டி விடுவிப்பு!
தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியாஅனது நவம்பர் 14ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டிக்கான இரு அணிகளும் அறிவிக்கப்பட்ட நிலையில், தீவிர பயிற்சிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
முன்னதாக தென் ஆப்பிரிக்க தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அறிவித்துள்ளது. ஷுப்மன் கில் தலைமையிலான இந்த அணியில், ரிஷப் பந்த் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டதுடன், அணியின் துணைக்கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இங்கிலாந்து தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக, வெஸ்ட் இண்டீஸ் தொடரை ரிஷப் பந்த் தவறவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம் இத்தொடருக்கான அணியில் தமிழக வீரர் நாரயணன் ஜெகதீசன் நீக்கப்பட்டுள்ளார். மேலும் வெஸ்ட் இண்டீஸ் தொடரை தவறவிட்டிருந்த ஆகாஷ் தீப் மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளார். அவருடன் வாஷிங்டன் சுந்தர், துருவ் ஜூரெல், ஜஸ்பிரித் புமா, கேஎல் ராகுல், நிதிஷ் ரெட்டி உள்ளீட்டோருக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால் முதல் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார் இடம் பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நிதிஷ் குமார் ரேட்டி விடுவிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்பிரிக்க ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடும் இந்திய ஏ அணியில் நிதிஷ் ரெட்டி இடம் பிடித்துள்ளதாக காரணமாக, அவர் டெஸ்ட் அணியில் இருந்து விடுவிக்கப்படுவதாகவும், இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய டெஸ்ட் அணி: ஷுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் பாடிக்கல், கே.எல்.ராகுல், சாய் சுதர்சன், ரிஷப் பந்த், துருவ் ஜூரல், அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.
Also Read: LIVE Cricket Score
இந்திய ஏ அணி: திலக் வர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், அபிஷேக் சர்மா, ரியான் பராக், இஷான் கிஷன், ஆயுஷ் படோனி, நிஷாந்த் சிந்து, விப்ராஜ் நிகம்,
மானவ் சுதர், ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, கலீல் அகமது, பிரப்சிம்ரன் சிங், நிதிஷ் குமார் ரெட்டி.