சாம்பியன்ஸ் கோப்பை 2025: தொடரில் இருந்து விலகிய மேத்யூ ஷார்ட்; மாற்று வீரர் அறிவிப்பு!

Updated: Mon, Mar 03 2025 10:49 IST
Image Source: Google

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முன்னேறியுள்ளன.

இதில் துபாயில் நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளும், லாகூரில் நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதில் எந்த இரு அணிகள் வெற்றிபெற்று இறுதிப்போட்டியில் விளையாடும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக இந்த நான்கு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது. 

இந்நிலையில் அரையிறுதி சுற்றுக்கு முன்னதாக ஆஸ்திரேலிய அணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அதன்படி ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியின் போது காயமடைந்த மேத்யூ ஷார்ட் தற்போது இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரையிறுதி சுற்றுக்கு முன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் தொடரில் இருந்து விலகி இருப்பது அந்த அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 

இதன் காரணமாக ரிஸர்வ் வீரர் பட்டியலில் இடம்பிடித்திருந்த கூப்பர் கன்னொலி ஆஸ்திரேலிய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இடதுகை ஆல் ரவுண்டரான கன்னொலி ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை மூன்று ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில் அதில் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. இதனால் அவருக்கு இந்த பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படுமா என்ற கேள்வியும் அதிகரித்துள்ளன. 

Also Read: Funding To Save Test Cricket

ஆஸ்திரேலிய அணி: ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, கூப்பர் கன்னொலி, பென் துவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்கர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லாபுசாக்னே, க்ளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, ஆடம் ஜாம்பா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை