ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று, நான்காவது முறையாக வெற்றி மகுடம் சூடியது. 

Advertisement

இந்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் 15ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் அகமதாபாத், லக்னோ ஆகிய இரு புதிய அணிகளுடன் சேர்த்து 10 அணிகளுடன் தொடர் நடைபெறவுள்ளது. 

Advertisement

இதனால் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு, மெகா ஏலம் மூலம் வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர். இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இப்போதிலிருந்தே அதிகரித்து வருகிறது. 

இந்நிலையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கும் வகையில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அத்தகவலானது, ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் அடுத்தாண்டு ஏப்ரல் 2ஆம் தேதி தொடங்கவுள்ளதாகவும், முதல் போட்டி சென்னையில் நடைபெறும் என்பது தான். 

முன்னதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, சென்னையில் நடைபெற்ற சிஎஸ்கே வெற்றி நிகழ்ச்சியில் பேசும் போது ஐபிஎல் தொடரின் 15ஆவது சீசன் நிச்சயம் இந்தியாவில் தான் நடைபெறும் என்று உறுதியளித்திருந்தார். 

அவர் கூறியது போலவே தற்போது வெளியாகியுள்ள தகவலும் இந்தியாவில் தான் அடுத்த சீசன் ஐபிஎல் தொடர் நடைபெறும் என்பதை உறுதிசெய்துள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News