ஐபிஎல் 2021: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் நாளை நடைபெறும் 53ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ்
- இடம் - துபாய் சர்வதேச மைதானம்
- நேரம் - 3.30 மணி
போட்டி முன்னோட்டம்
மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சீசனில் முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது. இருப்பினும் கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் சிஎஸ்கே தோல்வியைச் சந்திருப்பது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் அணியின் பேட்டிங் வரிசையில் ஃபாஃப், கெய்க்வாட், ராயுடு, ஜடேஜா ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சரிவர சோபிக்க தவறிவருகின்றன. ஆனால் பந்துவீச்சில் வலுவாக உள்ளதால் சென்னை அணி வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.
கேஎல் ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு சீசன் பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. மேலும் அணியின் தொடக்க வீரர்களைத் தவிர மற்ற வீரர்கள் சரியாக விளையாடததே அந்த அணியின் தோல்விகளுக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் பந்துவீச்சில் முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய் ஆகியோர் சிறப்பாக செயல்படுவதால், நாளைய போட்டியிலும் அவர்களது பங்களிப்பு அணிக்கு வெற்றியை தேடித்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் - 24
- சிஎஸ்கே வெற்றி - 15
- பஞ்சாப் வெற்றி - 9
உத்தேச அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட், ஃபாஃப் டு பிளெசிஸ், ராபின் உத்தப்பா, மொயீன் அலி, அம்பதி ராயுடு, எம்எஸ் தோனி (கே), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட் / ஜேசன் பெஹ்ரென்டார்ஃப்
பஞ்சாப் கிங்ஸ் - கேஎல் ராகுல் (கே), மயங்க் அகர்வால், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், சர்பராஸ் கான், ஷாருக் கான், மொயிஸ் ஹென்றிக்ஸ், ஹர்பிரீத் பிரார், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஃபேண்டஸி லெவன்
விக்கெட் கீப்பர்கள் - கேஎல் ராகுல்
மட்டைகள் - அம்பதி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட், ஐடன் மார்க்ராம், மயங்க் அகர்வால்
ஆல் -ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ
பந்துவீச்சாளர்கள் - ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய்