ஐபிஎல் திருவிழா 2022: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி டிப்ஸ்!

Updated: Sat, Apr 09 2022 11:20 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசனின் 17ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்
  • இடம் - டி ஒய் பாட்டீல் மைதானம், மும்பை
  • நேரம் - மாலை 3.30 மணி

போட்டி முன்னோட்டம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த மூன்று போட்டிகளிலும் படுமோசமாக சொதப்பி ஹாட்ரிக் தோல்வியை சந்தித்து, புள்ளிப்பட்டியலில் எட்டாவது இடத்தில் நீடிக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றிபெறவில்லை என்றால் பிளே ஆஃப் வாய்ப்பில் பலத்த அடி விழும் என கருதப்படுகிறது. இதனால், தவறுகளை சரிசெய்துகொண்டு அதிரடியாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

கடந்த சில போட்டிகளில் சொதப்பிய ருதுராஜ், முகேஷ் சௌத்ரி, ரவீந்திர ஜடேஜா போன்றவர்களுக்கு தனிக்கவனத்துடன் பயிற்சியளிக்கப்பட்டிருப்பதால், இன்று இவர்கள் சிறப்பாக செயல்பட வாய்ப்புள்ளது. அதேபோல், தோனி ஹெலிகாப்டர் ஷாட் ஆட பிரத்தியேக பயிற்சி மேற்கொண்டிருப்பதால், இன்று நடராஜனுக்கு எதிராக ஹெலிகாப்டர் ஷாட் ஆடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, கடந்த சீசனில் எப்படி சொதப்பியதோ, அதேபோல் சொதப்பி புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் தோற்றால் ஹாட்ரிக் தோல்வியாக அமைந்துவிடும். அந்த அணியில் ஓபனர்கள் வில்லியம்சன், அபிஷேக் ஷர்மா இருவரும் சிறந்த துவக்கம் தர தடுமாறுகிறார்கள். இதனால், அடுத்து களமிறங்கும் திரிபாதி, பூரன், மார்க்கம் ஆகியோருக்கு அழுத்தம் ஏற்படுகிறது. ஓபனர்களை மாற்றினால் இந்த பிரச்சினை தீரலாம்.

வாஷிங்டன் சுந்தர் பவர்பிளவில் அபாரமாக பந்துவீசுவதால், சிஎஸ்கே துவக்கத்திலேயே விக்கெட்களை இழக்க வாய்ப்புள்ளது. அதேபோல் நடராஜன், புவனேஷ்வர் குமார் ஆகியோர் டெத் ஓவர்களில் மாஸ் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உம்ரான் மாலிக் அதிவேகத்தில் பந்துவீசினாலும், ஸ்லாட்டில் அதிக பந்துகளை போடுவதால், ரன்கள் கசிகிறது. அதனை இன்றைய போட்டியில் சரி செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 16
  • சென்னை வெற்றி - 12
  • ஹைதராபாத் வெற்றி - 4

உத்தேச அணி 

சென்னை சூப்பர் கிங்ஸ் - ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மொயின் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா (கே), ஷிவம் துபே, எம்எஸ் தோனி, டுவைன் பிராவோ, டுவைன் பிரிட்டோரியஸ், கிறிஸ் ஜோர்டான், முகேஷ் சவுத்ரி.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராகுல் திரிபாதி, கேன் வில்லியம்சன், ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், அபிஷேக் சர்மா, அப்துல் சமத், ரொமாரியோ ஷெஃப்பர்ட், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர் - நிக்கோலஸ் பூரன்
  • பேட்டர்ஸ் - உத்தப்பா, திரிபாதி, வில்லியம்சன்,கெய்க்வாட்
  • ஆல்-ரவுண்டர்கள் - ஷிவம் தூபே, டுவைன் பிரிட்டோரியஸ், மொயீன் அலி
  • பந்துவீச்சாளர்கள் - டி.நடராஜன், கிறிஸ் ஜோர்டான், புவனேஷ்வர் குமார்
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை