இங்கிலாந்து அணியில் நீண்ட நாளாக இடம்பெறாமல் இருந்தது விரக்தியை ஏற்படுத்தியது - கிறிஸ் வோக்ஸ்!

Updated: Sun, Jun 20 2021 22:23 IST
Image Source: Google

இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. 

இத்தொடருக்கான குசால் பெரேரா தலைமையிலான 24 பேர் அடங்கிய இலங்கை அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஈயன் மோர்கன் தலைமையிலான 16 பேர் அடங்கிய இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் அறிவித்தது. 

இதில் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் 6 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் கடைசியாக 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரெலிய அணிக்கெதிரான போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நீண்ட காலமாக இங்கிலாந்து டி20 அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது எனக்கு விரக்தியை ஏற்படுத்தியது என கிறிஸ் வோக்ஸ் தொரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர்,“இங்கிலாந்து அணிக்காக விளையாடமல் இருந்தது எனக்கு மிகவும் விரத்தியை ஏற்படுத்தியது. ஏனெனில் கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாக நான் ஒரே ஒரு டி20 போட்டியில் கூட விளையாடமல் இருந்தேன். 

அதனால் தற்போது எனக்கு கிடைத்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டு, டி20 உலகக்கோப்பை தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம்பிடிக்க முயற்சிப்பேன்” என்று தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை