‘ரொம்ப ஹீட்டா இருக்கு; அப்போ இந்தாங்க இளநீர் சாப்பிடுங்க’ பிஎஸ்எல் தொடரில் குளு குளு ட்ரீட்மெண்ட்!
பாகிஸ்தானின் உள்ளூர் டி20 கிரிக்கெட் தொடரான பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் 6ஆவது சீசன் கடந்த பிப்ரவரி மாதம் பயோ பபுள் சூழலில் நடைபெற்று வந்தது. இதற்கிடையில் பாகிஸ்தானில் அதிகரித்து வந்த கரோனா தொற்று காரணமாக இத்தொடர் பாதியிலேயே ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், பிஎஸ்எல் தொடரை நடத்துவது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வந்தது. அதன் பயணாக தற்போது பிஎஸ்எல் தொடரின் எஞ்சியுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இத்தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் வீரர்கள் தனி விமானம் மூலம் அபுதாபி சென்று, அங்கு அவர்கள் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் போட்டி நடைபெறும் ஜூன் மாதத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அதிகபடியான வெப்பநிலை நிலவும் என்பதால், வீரர்கள் வீரர்கள் டிஹைரெட் ஆவாதை தடுக்கும் வகையில் போட்டிக்கு நடுவில் இளநீர், ஐஸில் நனைத்த துண்டு ஆகியவற்றை பயன்படுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.
அதன்படி ஆட்டத்தின் இடையே கிடைக்கும் டைம் அவுட் மற்றும் பவுண்டரி எல்லைகளில் இருக்கும் வீரர்களுக்கு ஆட்டத்தின் போது தண்ணீருக்கு பதிலாக இளநீரை கொடுக்கும் முடிவை பிசிபி எடுத்துள்ளது. இதன் மூலம் வெப்பம் காரணமாக வீரர்கள் டிஹைரெட் ஆவதை தடுக்க முடியும் என்றும் பிசிபி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.