கிராண்ட்ஹோம் குறித்து சர்ச்சை ட்வீட்; பிளாக்கேப்ஸை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்!
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டராக விளங்கி வருபவர் காலின் டி கிராண்ட் ஹோம். சர்வதேச போட்டிகளில் கலக்கி வந்த இவர் கடந்த சில வருடங்களாக ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று இந்தியர்களுக்கு பரிட்சையமானார்.
அனைத்து நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களும், தங்களது வீரர்கள் குறித்த அப்டேட்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்களுக்கு தெரியப்படுத்திவரும். அந்தவகையில் நியூசிலாந்து அணியும் புதிய முயற்சி ஒன்றை கையில் எடுத்தது.
தோனி எப்படி ஒரு காலக்கட்டத்தில் ஹேர் ஸ்டெயிலுக்கு பிரபலமாக விளங்கினாரோ, அதே போன்று காலின் டி கிராண்ட்ஹோமும் தனது நீண்ட முடிக்கொண்ட ஹேர்ஸ்டெயிலுக்கு பிரபலமானவர். அவரின் அந்த ஹேர்ஸ்டெயிலுக்கு ஆங்கிலத்தில் ‘முல்லட்' ( Mullet) எனப்பெயர் உள்ளது.
மிகவும் பிரபலமான அந்த ஹேர்ஸ்டெயிலை தற்போது கிராண்ட் ஹோம் மாற்றி அமைத்துள்ளார். அதாவது முடியை முழுவதுமாக குறைத்து, மொட்டை அடித்தது போன்று உள்ளார். இந்நிலையில் இவரின் தோற்றம் குறித்த தகவல் வெளியிட நினைத்துள்ளது நியூசிலாந்து வாரியம்.
அதன்படி கிராண்ட் ஹோமின் புகைப்படத்தை பதிவிட்டு, அதில் முக்கிய செய்தி என குறிப்பிட்டு, மிகவும் பிரபலமான காலின் டி கிராண்ட் ஹோமின் ‘முல்லட்' மறைந்தது என சோகமாக இருக்கும் எமோஜியை பதிவிட்டுள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் ‘முல்லட்’ என்ற வார்த்தையை கவனிக்காமல் டி கிராண்ட்ஹோம் மறைந்துவிட்டார் என நினைத்துக்கொண்டனர். மேலும் சமூக வலைதளங்களில் அவருக்காக இரங்கலை தெரிவிக்க தொடங்கிவிட்டனர். இவ்வளவு சிறு வயதில் உயிரிழந்துவிட்டார் என கவலை தெரிவித்து வருகின்றனர்.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
ஆனால் உண்மை தெரிந்த ரசிகர்கள் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தை விட்டு விளாசி வருகின்றனர். நியூசிலாந்தின் இந்த செயலால் கிரண்ட் ஹோமும் அதிர்ச்சியில் இருப்பதாக தெரிகிறது.