ENG vs NZ, 1st ODI: கான்வே, மிட்செல் அபார சதம்; இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து!

Updated: Sat, Sep 09 2023 12:15 IST
ENG vs NZ, 1st ODI: கான்வே, மிட்செல் அபார சதம்; இங்கிலாந்தை வீழ்த்தியது நியூசிலாந்து! (Image Source: Google)

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி அங்கு தலா 4 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளைப் பெற்று 2-2 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ளன.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நேஎற்று முதல் தொடங்கியது. அதன்படி இங்கிலாந்து - நியூசிலாந்து அணிக்களுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி கார்டிஃபில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்றுள்ள நியூசிலாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஹாரி ப்ரூக் - டேவிட் மாலன் இணை களமிறங்கினர். இதில் அதிரடியாக விளையாடிய டேவிட் மாலன் அரைசதம் அடைத்த கையோடு 54 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து ஹாரி ப்ரூக் 25 ரன்களிலும், ஜோ ரூட் 6 ரன்களுக்கும் என ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் - கேப்டன் ஜோஸ் பட்லர் இணை அதிரடியாக செயல்பட்டு அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். அதிலும் ஓய்வு முடிவை திரும்ப பெற்று தனது கம்பேக் போட்டியில் விளையாடிய பென் ஸ்டோக்ஸ் அரைசதம் கடந்தார். அவருக்கு துணையாக விளையாடிய கேப்டன் ஜோஸ் பட்லரும் அரைசதம் கடந்தார்.

பின் 52 ரன்களில் பென் ஸ்டோக்ஸும், 72 ரன்களில் ஜோஸ் பட்லரும் விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டோனும் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்த கையோடு 52 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். இறுதிடில் டேவிட் வில்லி தனது பங்கிற்கு 21 ரன்களைச் சேர்த்து ஃபினீஷிங் கொடுத்தார். 

இதன்மூலம் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்களைச் சேர்த்தது. நியூசிலாந்து தரப்பில் ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட்டுகளையும், டிம் சௌதீ 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.  

இதற்கடுத்து சவாலான இலக்கை நோக்கி களம் இறங்கிய நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் வில் யங் 29, ஹென்றி நிக்கோலஸ் 26 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். ஆதன்பின் தொடவக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே உடன் டேரில் மிட்சல் ஜோடி சேர, நியூசிலாந்து அணி இலக்கை நோக்கி மிகச் சிறப்பாக முன்னேற ஆரம்பித்தது. தொடர்ந்து இருவரும் சிறப்பாக விளையாடி அரைசதம் தாண்டி, நிலைத்து நின்று சதம் அடித்து அசத்தினர்.

இந்த ஜோடி ஆட்டம் இழக்காமல் 180 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதன்மூலம் நியூசிலாந்து அணி 45.4 ஓவரில் இலக்கை எட்டி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் டெவான் கான்வே 121 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 111 ரன்களையும், டேரில் மிட்சல் 91 பந்துகளின் 7 பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 118 ரன்களையும் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை