கான்வே, சோதி அதிரடியில் வங்கதேசத்தை பந்தாடிய நியூசிலாந்து !

Updated: Sun, Mar 28 2021 17:13 IST
New Zealand Cricket Team (Image Source: Google)

வங்கதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள்
மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை வங்கதேச அணி 3-0 என்ற கணக்கில் இழந்தது.
இந்நிலையில் இன்று இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி நடைபெற்றது.

இப்போட்டியில் டாஸ் வென்று நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன் படி
களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 210 ரன்களை குவித்தது
அந்த அணி. அதிகபட்சமாக தேவன் கான்வே 52 பந்துகளில் 92 ரன்களையும், வில் யங் 30
பந்துகளில் 53 ரன்களையும், கப்தில் 35 ரன்களையும் குவித்தனர். 

தொடர்ந்து விளையாடி வங்கதேச அணி வீரர்கள் எதிரணி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல்
சீரிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து கொண்டே இருந்தது. இருப்பினும் அந்த
அணியில் அபீஃப் ஹுசைன், முகமது சைபுதீன் ஆகிய இருவர் மட்டுமே 63 ரன்களுக்கு
பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதன் மூலம்
நியூசிலாந்து அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தி வெற்றி பெற்று
அசத்தியது.

நியூசிலாந்து அணி தரப்பில் இஷ் சோதி 4 விக்கெட்டுகளையும், ஃபார்குசன் 2
விக்கெட்டுகளையும் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினர்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை