எங்கள் உறவை நாடு அறியத் தேவையில்லை - கௌதம் கம்பீர்!

Updated: Thu, May 30 2024 20:40 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இத்தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அதிலும் இது அந்த அணி கைப்பற்றும் மூன்றாவது ஐபிஎல் சாம்பியன் பட்டமாகும். இதற்கு முக்கிய காரணமாக அந்த அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் செய்த சில மாற்றங்களே காரணம் என புகழப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரில் ரசிகர்கள் ஆச்சரியப்படும் வகையில் சில சம்பவங்கள் நடந்துள்ளது. அதன்படி எப்போதும் எலியும் பூனையுமாக களத்தில் காணப்படும் கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் சாமதனமாக சென்றது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில், கடந்த சில ஆண்டுகளாக கௌதம் கம்பீர் மற்றும் விராட் கோலி இருவரும் கிரிக்கெட் களத்தில் மோதுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.

அதிலும் குறிப்பாக கடந்த ஐபிஎல் சீசனின் போது லக்னோ அணியின் ஆலோசகராக செயல்பட்ட கௌதம் கம்பீர் - விராட் கோலி இருவருக்கும் இடையிலான மோதலானது பெரும் சர்ச்சையை கிளப்பியதுடன், பல்வேறு விமர்சனங்களுக்கும் வழிவகுத்திருந்தது. ஆனால் அதனை எல்லாம் மறந்து இருவரும் களத்தில் சிரித்த முகத்துடன் கட்டியணைத்து கொண்டதுடன், சில வார்த்தைகளை கூறி ஒருவருக்கு ஒருவர் பேசியது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. 

 

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள கௌதம் கம்பீர், “விராட் கோலிக்கும் எனக்கும் உள்ள உறவை நாடு அறியத் தேவையில்லை. உங்களின் கணிப்புகள் எல்லாம் உண்மைக்கு வெகு தொலைவில் உள்ளன. அணியின் வெற்றிக்கு உதவுவதற்காக, உணர்ச்சிகளை வெளிப்படுத்த என்னைப்போல அவருக்கும் உரிமை உண்டு. எங்களின் உறவு மக்களுக்கு மசாலா கொடுக்கும் உறவாக இருக்காது” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதுகுறித்து பெசிய இருந்த விராட் கோலி, “எனது செயலால் சிலர் ஏமாற்றம் அடைந்திருப்பார்கள். நான் நவீனை கட்டி அணைத்தேன். கௌதம் கம்பீர் என்னை கட்டி அணைத்தார். இந்த செயலால் ரசிகர்களுக்கு வேண்டிய மசாலா கிடைக்காமல் போயிருக்கும்” என தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை