ஐபிஎல் 2023: சிஎஸ்கே தக்கவைத்த & விடுவித்த வீரர்களின் விபரம்!

Updated: Tue, Nov 15 2022 19:59 IST
CSK Retained and Released Players Checklist with Purse Remaining (Image Source: Google)

ஐபிஎல் 16வது சீசன் வரும் டிசம்பர் 23ம் தேதி நடக்கிறது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை விடுவித்துள்ளன. 

சிஎஸ்கே அணியின் மேட்ச் வின்னராக கடந்த பல ஆண்டுகளாக திகழ்ந்த, டெத் ஓவர்களை அருமையாக வீசக்கூடிய ஆல்ரவுண்டர் ட்வைன் பிராவோவை சிஎஸ்கே அணி விடுவித்துள்ளது. பிராவோவை ரூ.4.4 கோடிக்கு கடந்த சீசனுக்கான ஏலத்தில் எடுத்த சிஎஸ்கே அணி, ஏலத்தில் இதைவிட குறைவான தொகைக்கு எடுக்கும் முனைப்பில் விடுவித்துள்ளது.

அவருடன் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் கிறிஸ் ஜோர்டான், நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் பவுலர் ஆடம் மில்னே ஆகியோரையும் சிஎஸ்கே விடுவித்துள்ளது. ராபின் உத்தப்பா, தமிழகத்தை சேர்ந்த விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் நாராயண் ஜெகதீசன், பகத் வர்மா, கேஎம் ஆசிஃப், ஹரி நிஷாந்த் ஆகிய உள்நாட்டு வீரர்களையும் சிஎஸ்கே விடுவித்துள்ளது.

சிஎஸ்கே விடுவித்த வீரர்கள் - டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா, கேஎம் ஆசிஃப், நாராயண் ஜெகதீசன்.

இந்த சீசனுக்கான ஏலத்திற்கு ஒவ்வொரு அணிக்கும் கூடுதலாக ரூ.5 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த ரூ.5 கோடியுடன் சேர்த்து சிஎஸ்கே அணிக்கு ரூ.20.45 கோடி கையிருப்பில் உள்ளது. 

சிஎஸ்கே தக்கவைத்த வீரர்கள் - எம்எஸ் தோனி (கே), டெவான் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சவுத்ரி, மதீஷா பத்திரனா, சிமர்ஜீத் சிங், தீபக் சாஹர், பிரசாந்த் சோலங்கி, மஹீஷ் தீக்ஷனா.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை