ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Thu, Mar 21 2024 21:11 IST
ஐபிஎல் 2024: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவ (Image Source: Cricketnmore)

ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நாளை முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. தொடரின் முதல் போட்டியிலேயே ரசிகர்களை கவரும் வகையில் நடப்பு சாம்பியனான ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஐபிஎல் தொடரில் இதுநாள் வரை கோப்பையை வெல்ல போராடிவரும் ஃபாஃப் டூ பிளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இப்போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறது. இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
  • இடம் - எம்ஏ சிதம்பரம் மைதானம், சென்னை
  • நேரம் - இரவு 8 மணி

போட்டி முன்னோட்டம்

நடப்பு சீசன் ஐபிஎல் தொடருக்கான பலமிக்க அணிகளில் சிஎஸ்கேவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் நடந்து முடிந்த வீரர்கள் மினி ஏலத்தில் நியூசிலாந்தின் இளம் சுழற் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் ரச்சின் ரவீந்தராவை ரூ.1.80 கோடிக்கும், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூரை 4 கோடிக்கும், நியூசிலாந்தின் அதிரடி ஆல் ரவுண்டர் டேரில் மிட்சலை ரூ.14 கோடிக்கும் வாங்கியுள்ளது அணிக்கு பெரும் பலமாக பார்க்கப்படுகிறது. 

அணியின் பேட்டிங் ஆர்டரில் ருருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்கியா ரஹானே, சமீர் ரிஸ்வி, ஷிவம் தூபே, டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் அணிக்கு வலிமை சேர்க்கின்றனர். பந்துவீச்சை எடுத்துக்கொண்டால் மதீஷா பதிரானா அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இருந்து வருகிறார். அவருடன் ஷர்துல் தாக்கூர், தீபக் சஹார், துஷார் தேஷ்பாண்டெ, முகேஷ் சௌத்ரி, முஸ்தஃபீசூர் ரஹ்மான் போன்ற வீரர்களும் இருப்பது அணி பந்துவீச்சு யுனிட்டை வலிமைப்படுத்தியுள்ளது. 

அதேபோல் சுழற்பந்துவீச்சாளர்களை எடுத்துக்கொண்டால் ரவீந்திர ஜடேஜா, மஹீஷ் தீக்‌ஷனா, மொயீன் அலி, மிட்செல் சாண்ட்னர் போன்ற உலக்கத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஷிவம் தூபேவிற்கு இந்த சீசனில் பந்துவீசுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என்பதால் அணியின் கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி அணியின் கேப்டனாக இருந்து வந்த தோனி தனது பதவியை ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கொடுத்துள்ளதால் அவரது செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. 

மறுபக்கம் நடப்பு சீசனில் ஃபாஃப் டூ பிளேசிஸ் தலைமையில் களமிறங்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பேட்டிங் வரிசைதான் அந்த அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. காரணம் ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரரான விராட் கோலி இருப்பது தான். ஒவ்வொரு ஐபிஎல் தொடரிலும் தனது அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் விராட் கோலி அந்த அணியின் நம்பிக்கை நாயகனாக பார்க்கப்பட்டு வருகிறார். 

அவரைத்தொடர்ந்து அணியின் நம்பிக்கை நாயகர்கள் ஃபாஃப் டூ பிளெசிஸ், கிளென் மேக்ஸ்வெல் ஆகியோருடன் இந்திய வீரர்கள் ராஜத் பட்டிதார், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் அபாரமான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களுடன் வில் ஜேக்ஸ், கேமரூன் க்ரீன் போன்ற அதிரடி வீரர்களும் நடப்பு சீசனுக்கான ஆர்சிபி அணியில் இணைந்துள்ளது அணிக்கு மிகப்பெரும் பலமாக பார்க்கப்படுகிறது.

அணியின் பந்துவீச்சு வரிசையில் முகமது சிராஜ், ரீஸ் டாப்லி, லோக்கி ஃபர்குசன், டாம் கரண், அல்ஸாரி ஜோசப், யாஷ் தயாள் போன்ற வீரர்கள் உள்ளனர்ர். இருப்பினும் அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் பெரிதளவில் இல்லை என்பது ஆர்சிபி அணிக்கு பெரும் தலைவலியை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நாளைய போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.  

பிட்ச் ரிப்போர்ட்

பொதுவாக, சென்னை சேப்பாக்கம் ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானமாக பார்க்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, இந்த மைதானத்தின் ஆடுகளம் மெதுவாகவே உள்ளது. இதன் காரணமாக சுழற்பந்து வீச்சாளர்கள் இங்கு அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். போட்டி தொடர்ந்து நடக்கும் போது ஏற்கனவே வறண்டு இருக்கும் பிட்ச் கூடுதலாக மெதுவாகிறது. இதனால் இங்கு பேட்டர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்துவது அவசியம். அதேசமயம் கடந்த சில ஐபிஎல் சீசன்களில் இங்கு சில நல்ல ஸ்கோர்களும் எடுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த மைதானத்தின் முதல் இன்னிங்ஸ் சராசரியானது 170 ரன்களாக இருக்கிறது. இதனால் இங்கு டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கலாம். 

நேரலை

இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடரின் இந்த சீசனின் அனைத்து போட்டிகளையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் நேரலையில் கண்டு ரசிக்கலாம். அதேசமயம் இத்தொடரின் ஓடிடி உரிமத்தை வியாகம் 18 நிறுவனம் பெற்றுள்ளதால், ரசிகர்கள் இத்தொடரை ஜியோ சினிமா ஓடிடி தளத்திலும் இலவசமாக நேரலையில் கண்டு மகிழலாம். 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 31
  • சென்னை சூப்பர் கிங்ஸ் - 20
  • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - 10
  • முடிவில்லை - 01

உத்தேச லெவன்

சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ரச்சின் ரவீந்திரா, அஜிங்கியா ரஹானே, டேரில் மிட்செல், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி, மிட்செல் சான்ட்னர், ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், முஸ்தாஃபிசூர் ரஹ்மான்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாஃப் டு பிளெசிஸ், விராட் கோலி, ரஜத் படிதார், கேமரூன் கிரீன், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக், கர்ண் ஷர்மா, அல்ஜாரி ஜோசப், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள்: தினேஷ் கார்த்திக்
  • பேட்டர்ஸ்: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ், ருதுராஜ் கெய்க்வாட், டேரில் மிட்செல், ஷிவம் துபே
  • ஆல்ரவுண்டர்கள்: ரவீந்திர ஜடேஜா, கிளென் மேக்ஸ்வெல் (கேப்டன்), கேமரூன் கிரீன், ரச்சின் ரவீந்திரா (துணை கேப்டன்)
  • பந்துவீச்சாளர்கள்: தீபக் சாஹர்    

CSK vs RCB IPL 2024 Dream11 Prediction, Today Match CSK vs RCB, CSK vs RCB Dream11 Team, Fantasy Cricket Tips, CSK vs RCB Pitch Report, Today Cricket Match Prediction, Today Cricket Match, Dream11 Team, Playing XI, Pitch Report

Disclaimer:*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை