CWC 2023: பரபரப்பான ஆட்டத்தில் அயர்லாந்தை கடைசி பந்தில் வீழ்த்தி ஸ்காட்லாந்த் த்ரில் வெற்றி!

Updated: Wed, Jun 21 2023 20:31 IST
Image Source: Google

ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் 7ஆவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து மற்று ஸ்காட்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இதில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.   

அதன்படி அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக பால் ஸ்டிர்லிங் - ஆண்டி மெக்பிரைன் இணை களமிறங்கினர். ஆனால் அந்த அணிக்கு முதல் ஓவரிலேலே அதிர்ச்சி காத்திருந்தது.  நட்சத்திர வீரர் பால் ஸ்டிர்லிங் மற்றும் கேப்டன் அண்டி பால்பிர்னி ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழது ஏமாற்றமளித்தனர்.

அதன்பின் களமிறங்கிய ஹேரி டெக்டர், லோர்கன் டக்கர் ஆகியோரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அதுவரை தாக்குப்பிடித்த ஆண்டி மெக்பிரையனும் 32 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் அயர்லாந்து அணி 70 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாற்யது. அதன்பின் ஜோடி சேர்ந்த கர்டிஸ் கேம்பர் - ஜார்ஜ் டக்ரெல் இணை போறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் இழப்பை தடுத்ததுடன் அணியின் ஸ்கோரையும் உயர்த்தினர். 

தொடர்ந்து அபாரமாக விளையாடிய இருவரும் அரைசதம் கடக்க, அணியின் ஸ்கோரும் 200 ரன்களைத் தாண்டியது. பின் 69 ரன்களை எடுத்திருந்த டக்ரெல் 69 ரன்களில் ஆட்டமிழக்க, மறுபக்கம் அதிரடியாக விலையாடிய வந்த கர்டிஸ் காம்பேர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

தொடர்ந்து பவுண்டரிகளாக விளாசிய காம்பேர் 9 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 120 ரன்களைச் சேர்த்த நிலையில் கட்சி ஓவரின் 5ஆவது பந்தில் விக்கெட்டை இழந்தார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 286 ரன்களைச் சேர்த்தது. ஸ்காட்லாந்து அணி தரப்பில் பிராண்டன் மெக்கலம் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

அதன்பின் கடின இலக்கை துரத்திய ஸ்காட் லாந்து அணியில் மேத்யூ கிராஸ் 4 ரன்களிலும், பிராண்டன் மெக்முலன் 10 ரன்களிலும் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடி அரைசதம் கடந்திருந்த கிரிஸ்டோபர் மெக்பிரிட் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

இதையடுத்து வந்த ஜார்ஜ் முன்ஸி 15, கேப்டன் ரிச்சி பெர்ரிங்டன் 10, தாமஸ் 18, கிரிஸ் 20 ரன்களுக்கும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த மைக்கேல் லீஸ்க் - மார்க் வாட் இணை அதிரடியாக விளையாடி அணியை இலக்கை நோக்கி அழைத்துச் சென்றனர். 

இதில் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மார்க் வாட் 47 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய மைக்கேல் லீஸ்க் அரைசதம் கடந்தது அணிக்கு நம்பிக்கையளித்தார். இறுதியில் ஸ்காட்லாந்து அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 8 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது.  இதில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த லீஸ்க் அடுத்த பந்தில் சிங்கிள் எடுத்தார். 

அதன்பின் ஷரிஃபின் 6 ரன்களில் விக்கெட்டைக் இலக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த மைக்கேல் லீஸ்க் 9 பவுண்டரி, 6 சிக்சர்கள் என 91 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் ஸ்காட்லாந்து அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெயத்து. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை