CWC 2023: ஹோப், பூரன் அபார சதம்; நேபாளுக்கு 340 டார்கெட்!

Updated: Thu, Jun 22 2023 16:16 IST
Image Source: Google

ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகள் ஜிம்பாப்வேவில் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் 9ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாள் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற நேபாள் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக பிராண்டன் கிங் - கைல் மேயர்ஸ் இணை களமிறங்கினர். இதில் கைல் மேயர்ஸ் ஒரு ரன்னிலும், அடுத்து களமிறங்கிய ஜான்சன் சார்லஸ் ரன்கள் ஏதுமின்றியும் ஆட்டமிழக்க, மறுபக்கம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பிராண்டன் கிங்கும் 310 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஷாய் ஹோப் - நிக்கோலஸ் பூரன் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை ராக்கெட் வேகத்தில் உயர்த்தினர். தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அடுத்தடுத்து சதங்களை விளாச அணியின் ஸ்கோரும் 250 ரன்களைத் தாண்டியது. 

பின் 10 பவுண்டரி, 4 சிக்சர்கள் என 115 ரன்களை எடுத்திருந்த நிக்கோலஸ் பூரன் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய அதிரடியாக விளையாடிய ரோவ்மன் பாவெல் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர்களைத் தொடர்ந்து கடைசி ஓவர் வரை களத்தில் இருந்த கேப்டன் ஷாய் ஹோப் 10 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 132 ரன்களைச் சேர்த்து ஆட்டமிழந்தனர். 

இதனால் 50 ஓவர்கள் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களைச் சேர்த்தது. நேபாள் அணி தரப்பில் லலித் ராஜ்பான்ஷி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை