ஐபிஎல் 2022: அட்டகாசமான கம்பேக் கொடுத்த குல்தீப் யாதவ்!

Updated: Sun, Mar 27 2022 20:01 IST
Image Source: Google

ஐபிஎல் 15ஆவது சீசன் போட்டிகள் நேற்று தொடங்கியது. முதல் போட்டியில் சென்னையை வீழ்த்தி கொல்கத்தா அபார வெற்றி பெற்றது. கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தவர்கள் அஜிங்கியா ரகானே மற்றும் உமேஷ் யாதவ் தான்.

சென்னை அணியின் இன்னிங்ஸின் போது, ஓப்பனிங் வீரர்களின் விக்கெட்டை அடுத்தடுத்து கைப்பற்றி நிலைகுலைய வைத்தார் உமேஷ் யாதவ். இதே போல கொல்கத்தா அணியின் பேட்டிங்கின் போது ஓப்பனிங் களமிறங்கிய ரகானே 34 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் என 44 ரன்களை குவித்தார். இதே போல தோனியும் அரைசதம் அடித்து அசத்தினார். ஃபார்ம் அவுட் என பல விமர்சனங்களை சந்தித்த இந்த சீனியர் வீரர்கள் தரமான கம்பேக் கொடுத்தனர்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற மும்பை - டெல்லி போட்டியிலும் இது தொடர்கிறது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் ரோஹித் சர்மா - இஷான் கிஷான் அதிரடி காட்டினர். இதனால் 60 ரன்களை தாண்டியும் டெல்லி பவுலர்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அப்போது களத்திற்கு வந்த சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் மேஜிக் காட்டினார்.

41 ரன்கள் எடுத்து ரோகித் சர்மா நல்ல ஃபார்மில் இருந்த போது தனது முதல் ஓவரை வீசிய குல்தீப் யாதவ், அவரின் ஆசையை தூண்டினார். நன்கு தூக்கி அடிப்பது போன்று ஒரு பந்தை போட்டுக்கொடுத்தார். இந்த வலையில் சிக்கிய ரோஹித் சர்மா பந்து மெதுவாக வந்தது என்று தெரியாமல் சிக்ஸர் அடிக்க முயன்று அவுட்டானார். அதனைத் தொடர்ந்து களத்திற்கு வந்த புது பேட்ஸ்மேன் அன்மோல் ப்ரீத் சிங்கையும் 8 ரன்களுக்கு வெளியேற்றி அசத்தினார். அதன்பின் காட்டடி மன்னர் கீரன் பொல்லார்டை 3 ரன்களுக்கு வெளியேற்றினார்.

கடந்த 2 ஆண்டுகளாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் உள்ள குல்தீப் ஐபிஎல்-லும் புறக்கணிக்கப்பட்டார். 2 ஆண்டுகளாக பேட்ஸ்மேன்களுக்கு ஜூஸ் எடுத்துச் செல்வது போன்ற பணிகள் தான் அவருக்கு பெரும்பாலும் வழங்கப்பட்டது. இதனை குல்தீப் யாதவே பகிரங்கமாக தெரிவித்தார். இந்நிலையில் அதற்கெல்லாம் பதிலடி தரும் வகையில் அட்டகாசமான கம்பேக் தந்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை