உலகக்கோப்பையிலும் தீபக் சஹார் பங்கேற்பது சந்தேகம்!

Updated: Thu, Apr 14 2022 14:05 IST
Image Source: Google

15ஆவது ஐபிஎல் தொடர் கடந்த 3 வாரங்களாக விறுவிறுப்புக்கு சற்றும் பஞ்சம் இன்றி நடைபெற்று வருகிறது. இதில் 4 போட்டிகளில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்த சென்னை அணி தற்போதுதான் மீண்டுள்ளது.

சென்னை அணியின் தோல்விகளுக்கு தீபக் சஹார் இல்லாதது முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது. காலில் தசை நார் கிழிவு பிரச்சினை காரணமாக சிகிச்சை பெற்று வந்த தீபக் சஹார் வரும் 26ஆம் தேதி ஐபிஎல் தொடருக்கு வருவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக வலைப்பயிற்சியையும் தொடங்கியிருந்தார்.

அதன்பின்னர் திடீரென அவர் ஐபிஎல்-ல் இருந்தே விலகுவதாக அறிவிக்கப்பட்டது. முதுகு பகுதியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவரால் சரியாக பவுலிங் வீச முடியாது எனத்தெரிவிக்கப்பட்டது. அது குணமடைய 2 மாதங்களாவது ஆகும் என்பதால் சிஎஸ்கேவின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் போனது.

இந்நிலையில் இந்திய அணிக்கே ஆப்பு வந்துள்ளது. தீபக் சஹாருக்கு தற்போது ஏற்பட்டுள்ள முதுகு வலி பிரச்சினை சரியாக குறைந்தது 4 மாதங்கள் வரை ஆகும் என பிசிசிஐ வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அவர் உடல்நிலை முன்னேற்றத்தை பொறுத்து அது அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி20 உலகக்கோப்பை வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு தீபக் சஹார் முக்கிய பவுலராக இருக்கிறார். இந்த நிலைமையில் 4 மாதங்கள் ஓய்வு, அதன் பிறகு பழைய உடற்தகுதியை பெற வேண்டும் என்பதால் அவர் உலகக்கோப்பை தொடரிலும் பங்கேற்க வாய்ப்பில்லை எனத்தெரிகிறது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை