முதல் சர்வதேச சதம்; மகிழ்ச்சியை கொண்டாடிய ஹூடா - காணொளி!

Updated: Tue, Jun 28 2022 23:56 IST
Deepak Hooda is the first Indian to score a men's international hundred in Ireland (Image Source: Google)

இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான 2ஆவது டி20 போட்டி இன்று டப்ளினில் நடைபெற்றுவருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் குவித்தது.

அதிரடியாக ஆடிய தீபக் ஹூடா சதம் விளாசினார். 57 பந்துகளில் 9 பவுண்டரி, 6 சிக்சர்கள் உடன் 104 ரன்கள் குவித்து அவர் ஆட்டமிழந்தார். முன்னதாக தொடக்க வீரராக இறங்கிய சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 77 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 

இந்நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதமடித்த தீபக் ஹூடாவின் காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறாது. மேலும் சுரேஷ் ரெய்னா, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் ஆகியோரைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் சதமடித்த 4ஆவது இந்தியர் எனும் பெருமையையும் தீபக் ஹூடா பெற்றுள்ளார். 

 

 

இதையடுத்து கடின இலக்கை துரத்தி விளையாடி வரும் அயர்லாந்து அணியும் பவுண்டரியும், சிக்சருமாக விளாசி ஆட்டத்தின் போக்கை மாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை