ஐபிஎல் 2022: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Thu, Apr 28 2022 11:37 IST
Image Source: Google

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றுடன்  40 ஆட்டங்கள் முடிந்து விட்டன. மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 41ஆவது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 3 வெற்றி, 4 தோல்வியுடனும்,  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 வெற்றி, 5 தோல்வியுடனும் தலா 6 புள்ளிகள் பெற்றுள்ளன. நிகர ரன்ரேட் அடிப்படையில் டெல்லி 7-வது இடத்திலும், கொல்கத்தா 8 -வது இடத்திலும் உள்ளன. இதனால் 4-வது வெற்றியை பெறப்போகும் அணி எது என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம் - வான்கடே மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம் 

‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகளே ‘ப்ளேஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் என்பதால், அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்க இனி ஒவ்வொரு ஆட்டமும் இரு அணிக்குமே முக்கியமாகும்.

டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் டேவிட் வார்னரும், பிரித்வி ஷாவும் சிறப்பாக பேட்டிங் செய்தாலும் மிடில் வரிசை அவ்வப்போது சொதப்பி விடுகிறது. இதே நிலைமைதான் பந்து வீச்சிலும் காணப்படுகிறது.

கொல்கத்தா அணியில் அதிகமான நட்சத்திர வீரர்கள் அங்கம் வகித்தாலும் அந்த அணி தொடர்ந்து தடுமாற்றம் கண்டு வருகிறது. ஒரு அரை சதம் அடித்த வெங்கடேஷ் அய்யர் மற்ற 7 ஆட்டங்களில் 20 ரன்களை கூட தாண்டவில்லை. தொடர்ந்து 3 ஆட்டங்களில் ஒரு விக்கெட்கூட வீழ்த்தாத சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தியின் தடுமாற்றமும் பின்னடைவாக உள்ளது. 

கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், ஆண்ட்ரே ரஸல் மட்டும் ஓரளவு நன்றாக ஆடுகிறார்கள். கடந்த ஆட்டத்தில் வெளியே உட்கார வைக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் பேட் கம்மின்ஸ், ஆரோன் பிஞ்ச் இன்று களம் திரும்ப வாய்ப்புள்ளது.

கொல்கத்தா அணி ஏற்கனவே டெல்லியிடம் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதனால் பதிலடி கொடுத்து 4ஆவது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேறும் முனைப்பில் உள்ளது. கொல்கத்தாவை மீண்டும் வீழ்த்தி 4ஆவது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முன்னோக்கி நகரும் ஆர்வத்தில் டெல்லி உள்ளது. எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 30
  • டெல்லி வெற்றி - 14
  • கொல்கத்தா வெற்றி - 16

உத்தேச லெவன்

டெல்லி கேப்பிட்டல்ஸ்: பிருத்வி ஷா, டேவிட் வார்னர், சர்பராஸ் கான், ரிஷப் பண்ட் (கேப்டன்), லலித் யாதவ், ரோவ்மன் பவல், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், முஸ்தபிசுர் ரஹ்மான், கலீல் அகமது

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: சாம் பில்லிங்ஸ், சுனில் நரைன், ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரிங்கு சிங், வெங்கடேஷ் அய்யர், ஆண்ட்ரே ரஸல், டிம் சவுத்தி, சிவம் மவி, உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி.

ஃபேண்டஸி லெவன்

  • கீப்பர் - ரிஷப் பந்த்
  • பேட்ஸ்மேன்கள் - டேவிட் வார்னர், ஸ்ரேயாஸ் ஐயர், பிரித்வி ஷா
  • ஆல்-ரவுண்டர்கள் - ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், லலித் யாதவ்
  • பந்துவீச்சாளர்கள் - குல்தீப் யாதவ், டிம் சவுத்தி, உமேஷ் யாதவ், கலீல் அகமது
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை