ஐபிஎல் 2021 தகுதிச்சுற்று: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!

Updated: Tue, Oct 12 2021 15:42 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 14ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், அடுத்ததாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணி எது என்ற கேள்வி ரசிகர்களை பெரும் எதிர்பார்ப்பில் ஆழத்தியுள்ளது. 

அதன்படி நாளை நடைபெறும் இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியில் ரிஷப் பந்த தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ஈயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள்- டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம் - ஷார்ஜா கிரிக்கெட் மைதானம்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம் 

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், கடைசியாக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

அதிலும் குறிப்பாக அணியின் தொடக்கவீரர்களைத் தவிர மற்ற யாரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் இருப்பது அணிக்கு சற்று தலைவலியாக இருந்துள்ளது. மேலும் பந்துவீச்சாளர்களில் ஆவேஷ் கான், ரபாடா, நோர்ட்ஜே ஆகியோர் சிறப்பாக செயல்பட்டாலும் பேட்ஸ்மேன்கள் விளையாடும் பட்சத்திலேயே அந்த அணி வெற்றிபெறும். 

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் பல அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி தற்போது பிளே ஆஃப் சுற்றிலும், அசத்தி வருகிறது. வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில், நிதீஷ் ராணா ஆகியோருடன் சுனில் நரைன், லோக்கி ஃபர்குசன், வருண் சக்ரவர்த்தியும் இருப்பது அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

மேலும் இப்போட்டியில் கேகேஆர் அணி வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கும் முன்னேறும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 28
  • டெல்லி வெற்றி - 12
  • கொல்கத்தா வெற்றி - 15
  • முடிவில்லை - 1

உத்தேச அணி
டெல்லி கேப்பிட்டல்ஸ் -
ஷிகர் தவான், பிருத்வி ஷா, ரிஷப் பந்த் (கே), ஸ்ரேயாஸ் ஐயர், சிம்ரான் ஹெட்மையர், அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, டாம் கர்ரன் / மார்கஸ் ஸ்டோனிஸ், அவேஷ் கான், அன்ரிச் நோர்ட்ஜே

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சுப்மான் கில், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, ஈயான் மோர்கன் (கே), தினேஷ் கார்த்திக், ஷாகிப் அல் ஹசன், சுனில் நரைன், லோக்கி ஃபர்குசன், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்
  • பேட்டர்ஸ் - பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் திரிபாதி, சுப்மான் கில்
  • ஆல் -ரவுண்டர்கள் - அக்சர் பட்டேல், வெங்கடேஷ் ஐயர், சுனில் நரைன்
  • பந்துவீச்சாளர்கள் - அன்ரிச் நோர்ட்ஜே, அவேஷ் கான், வருண் சக்கரவர்த்தி.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை