தாதா ரொக்கார்டை காலி செய்த தவான்!
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 262 ரன்களைச் சேர்த்தது.
இதையடுத்து இலக்கை துரத்திவரும் இந்திய அணியும் கிட்டத்தட்ட வெற்றியை தங்கள் வசம் வைத்துள்ளது. இந்திய அணி தரப்பில் கேப்டன் தவான், அறிமுக வீரர் இஷான் கிஷான் ஆகியோர் அரைசதம் கடந்துள்ளனர்.
இந்நிலையில் இப்போட்டியில் விளையாடி வரும் ஷிகர் தவான் 23 ரன்கள் எடுத்திருந்த போது, சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டின் 6ஆயிரன் ரன்களைக் கடந்தார்.
இதன்மூலம் இந்தியா தரப்பில் 6ஆயிரம் ரன்களை விளாசிய 10ஆவது வீரர் என்ற பெருமையையும் தவான் பெற்றார். அதேசயம் 141 இன்னிங்ஸ்களில் 6ஆயிரம் ரன்களை கடந்த ஷிகர் தவான், இந்தியா சார்பில் குறைந்த இன்னிங்ஸ்களில் 6 ஆயிரம் ஒருநாள் ரன்களை கடந்த 2ஆவது வீரர் எனும் சாதனையை படைத்தார்.
இதன் மூலம் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலியின் சாதனையை முறியடித்து ஷிகர் தவான் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். மேலும் உலகளவில் குறைந்த இன்னிங்ஸில் 6ஆயிரம் ரன்களைக் கடந்த நான்காவது வீரர் என்ற பெருமையையும் தவான் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.