பெங்களூருவில் எம் எஸ் தோனி கிரிக்கெட் அகாதமி!
இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் முக்கியமானவர் முன்னாள் வீரர் மகேந்திர சிங் தோனி.இந்திய அணிக்காக 90 டெஸ்டுகள், 350 ஒருநாள், 98 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளா தோனி, 16ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி யாரும் எதிர்பாராத வகையில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி, ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மட்டும் செயல்பட்டு வருகிறார்.
மேலும் தனது ஓய்வுக்கு பிறகு மகேந்திர சிங் தோனி, இளம் வீரர்களை உருவாக்கும் முயற்சியில் கிரிக்கெட் அகாதமிகளை தொடங்கி வருகிறார். அதன்படி கடந்த ஜனவரி மாதம் அகமதாபாத்தில் தோனி பெயரில் கிரிக்கெட் அகாதெமி தொடங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது பெங்களூருவில் எம்.எஸ். தோனி கிரிக்கெட் அகாதெமி தொடங்கப்பட்டுள்ளது. விளையாட்டு நிறுவனங்களான கேம்பிளே மற்றும் ஆர்கா ஸ்போர்ட்ஸ் ஆகியவை இதன் செயல்பாடுகளை நிர்வகிக்கின்றன.
Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021
இதுகுறித்து பேசிய தோனி, “எம்.எஸ். தோனி கிரிக்கெட் அகாதமியைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிறந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் கிரிக்கெட் பயிற்சிகள் அளிக்கப்படும். தரமான பயிற்சியாளர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள் பயிற்சியளிப்பார்கள். கிரிக்கெட் தொழில்நுட்பம் மற்றும் இந்த விளையாட்டுக்குத் தேவையான மனநலப் பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள எம்.எஸ். தோனி கிரிக்கெட் அகாதமியில் இணையுங்கள்” எனக் கூறியுள்ளார்.