வார்னே குறித்து பேச விரும்பவில்லை - மிட்செல் ஸ்டார்க்!

Updated: Sat, Jan 29 2022 14:18 IST
Didn't Like Shane Warne's Criticism; Wanted To Quit Test Cricket; Reveals Mitchell Starc (Image Source: Google)

ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க். தற்போது 31 வயதாகும் ஸ்டார்க், ஆஸ்திரேலிய அணிக்காக 2010 முதல் 66 டெஸ்டுகள், 99 ஒருநாள், 48 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் 2021ஆம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை வென்றுள்ளார். 

ஆஷஸ் தொடரை 4-0 என ஆஸ்திரேலியா வென்றது. 5 டெஸ்டுகளிலும் விளையாடிய ஸ்டார்க், 19 விக்கெட்டுகள் எடுத்தார். மேலும் 2021இல் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 11 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார் ஸ்டார்க். டி20 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் 4 ஓவர்கள் வீசி விக்கெட் இன்றி 60 ரன்கள் கொடுத்தார். 

இதனால் ஸ்டார்க்கின் பந்துவீச்சு விமர்சனத்துக்கு ஆளானது. ஆஷஸ் முதல் டெஸ்டில் ஸ்டார்க்குக்குப் பதிலாக ஜை ரிச்சர்ட்சன் விளையாட வேண்டும் என முன்னாள் ஆஸி. வீரர் ஷேன் வார்னே கூறினார். 

இந்நிலையில் அதுகுறித்து பேசிய ஸ்டார்க், “கடந்த வருடம் கடினமாக இருந்தது. நான் நினைத்தது போல என்னால் பந்துவீச முடியவில்லை. சில நேரங்களில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபடவே நான் விரும்பவில்லை. 

வார்னேவின் விமர்சனம் பற்றி பேசச் சொல்கிறீர்கள். அதில் எனக்கு ஆர்வமே கிடையாது. அவருக்குத் தன் கருத்தைச் சொல்ல உரிமை உள்ளது. நான் விரும்பும் விதத்தில் கிரிக்கெட் விளையாடப் போகிறேன். 

எனக்குக் குடும்பத்தினரின் ஆதரவு உள்ளது. திறமையான வீரர்களுடன் இணைந்து விளையாடுகிறேன். எனவே செளகரியமான சூழலில் நான் உள்ளேன். என் வட்டத்துக்கு வெளியே கூறப்படுவது பற்றி நான் அக்கறைப்படுவதில்லை” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை