டிஎன்பிஎல் 2021: மணி பாரதி, ஹரி நிசாந்த் அதிரடியில் அசத்தல் வெற்றிபெற்ற திண்டுக்கல்!
டிஎன்பிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 9ஆவது லீக் ஆட்டத்தில் லைகா கோவை கிங்ஸ் அணி, திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி களமிறங்கிய கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 201 ரன்களை குவித்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கங்கா ஸ்ரீதர் ராஜூ 90 ரன்களை விளாசினார்.
அதன்பின் 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய கோவை அணிக்கு ஹரி நிஷாந்த் - மணி பாரதி இணை அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றது.
இதில் இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். பின் 70 ரன்களில் ஹரி நிஷாந்த் ஆட்டமிழக்க, 81 ரன்களில் மணி பாரதியும் விக்கெட்டை இழந்தார். இருப்பினு, திண்டுக்கல் அணி 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் கோவை அணியை வீழ்த்தில் அசத்தலான வெற்றியைப் பதிவுசெய்தது.
இதன் மூலம் டிஎன்பிஎல் வரலாற்றில் அதிக ரன்களைச் சேஸ் செய்த அணி என்ற பெருமையையும் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பெற்றது. மேலும் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்த மணி பாரதி ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.