டி20 உலகக்கோப்பை நிச்சயம் விளையாடுவேன் - தினேஷ் கார்த்திக் !

Updated: Sun, Jun 19 2022 10:36 IST
Image Source: Google

நேற்று முந்தினம் நடந்த தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் இந்தியா 82 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு காரணமாக திகழ்ந்தார். 

தற்போது 37 வயதான அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு அணியில் இடம்பெற்று டி20 போட்டியில் முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அந்த போட்டியில் 13ஆவது ஓவரில் இந்தியா 81/4 என்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருந்தது. 

அப்போது தினேஷ் கார்த்திக் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். தினேஷ் கார்த்திக் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை விளாசி அசத்தினார். பாண்டியா 31 பந்துகளில் 46 ரன்கள் ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இதில் அபாரமாக ஆடிய தினேஷ் காா்த்திக் 27 பந்துகளில் 55 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்டாா் தினேஷ் காா்த்திக். இதனால் தொடா் தற்போது 2-2 என சமநிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை போட்டியில் கட்டாயம் ஆட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளேன் என தினேஷ் காா்த்திக் கூறியுள்ளாா்.

இதுகுறித்து பேசிய அவர், “வரும் டி20 உலகக் கோப்பையில் கட்டாயம் ஆட வேண்டும் என்தில் உறுதியாக உள்ளேன். இது எனது வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. அணியில் சோ்க்கப்படாவிட்டால் ஏற்படும் நிலையை அறிவேன். ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி எனக்கு நல்ல வாய்ப்பை வழங்கியது. கடைசி கட்டத்தில் ரசித்து ஆடினேன். பல்வேறு ஆட்டங்களில் இந்தியா வெல்ல உதவ வேண்டும்” என்று தெரிவித்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை