ஐபிஎல் 2021: ஐபிஎல் விதிமுறையை மீறிய தினேஷ் கார்த்திக்; நடவடிக்கை பாயுமா?

Updated: Thu, Oct 14 2021 13:30 IST
Image Source: Google

ஷார்ஜாவில் நடைபெற்ற டெல்லி- கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் கொல்கத்தா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. பிறகு பேட்டிங் செய்த கொல்கத்தா அணி பரபரப்பான முறையில் 19.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் ரபாடா பந்தில் தினேஷ் கார்த்திக் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். போல்ட் ஆன அவர், ஓய்வறைக்குத் திரும்பும் முன்பு ஒரு ஸ்டம்பைக் கோபத்தில் தள்ளி விட்டுச் சென்றார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

இதையடுத்து ஐபிஎல் விதிமுறையை மீறிய குற்றத்துக்காக அவர் மீது ஐபிஎல் நிர்வாகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் தனது தவறை தினேஷ் கார்த்திக் ஒப்புக்கொண்டார். இருப்பினும் அவர் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து ஆட்ட நடுவர் முடிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை