ஐபிஎல் 2022: ரிஷப் பந்தின் செயலிற்கு கண்டனம் தெரிவிக்கும் முன்னாள் வீரர்கள்!

Updated: Sat, Apr 23 2022 11:38 IST
'Disgrace, Unacceptable': Rishabh Pant's Move To Call Back DC Batters Criticized (Image Source: Google)

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 34ஆவது லீக் போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின்போது டெல்லி அணி வெற்றிபெற 6 பந்துகளுக்கு 36 ரன்கள், அதாவது 6 சிக்ஸர்கள் தேவைப்பட்டது. இந்த நிலையில் மெக்காய் வீசிய முதல் 3 பந்திலும் ஹாட்ரிக் சிக்ஸரை பொவேல் பறக்கவிட போட்டியில் விறுவிறுப்பு எகிறியது.

மெக்காய் வீசிய 3வது பந்து, பேட்ஸ்மேன் நெஞ்சு வரை வந்ததால், இதனை 'நோ பால்' என்று அறிவிக்க வேண்டும் என்று குல்தீப் யாதவ் முறையிட்டார். ஆனால், அது 'நோ பால்' இல்லை என்று நடுவர் சொல்ல, கடுப்பான டெல்லி அணி, பயிற்சியாளரை மைதானத்துக்குள் அனுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டது. 

இதனையடுத்து கேப்டன் ரிஷப் பந்த், டெல்லி அணியின் வீரர்களை ஆட்டத்தை நிறுத்திவிட்டு வருமாறு கூறினார். இதனால் மைதானத்தில் பரபரப்பு தொற்றி கொண்டது. இதனையடுத்து நடுவர்கள் டெல்லி அணியை சமாளிக்க, மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது. இதனால் ஆட்டம் சிறிதுநேரம் தடைபட்டது.

இந்த நிலையில்  ரிஷப் பந்த் களத்தில் வெளிப்படுத்திய செயலை இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் கடுமையாக சாடியுள்ளார். 

இதுகுறித்து வர்ணனையாளராக இருக்கும் கெவின் கூறுகையில், "ரிக்கி பாண்டிங் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்க விடமாட்டார் என நினைக்கிறேன். பயிற்சியாளரை மைதானத்துக்கு அனுப்பி விவாதம் செய்கிறார்கள். ரிஷப்பின் இந்த செயல் சரியான நடத்தை கிடையாது. நாம் ஜென்ட்டில்மேன் விளையாட்டை விளையாடுகிறோம் என்பதை ஞாபகப்படுத்தி கொண்டால் நல்லது" என்று விமர்சித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீனும் ரிஷப் பந்தின் செயலை கண்டித்துள்ளார்.  ''டெல்லி அணியின் நடத்தை  மோசமானது. கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு. இந்த செயல்பாட்டை முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று ட்வீட் செய்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை