எஸ்ஏ20 2024: 106 மீட்டர் இமாலய சிக்சரை பறக்கவிட்ட ஃபெரீரா; வைரலாகும் காணொளி!

Updated: Sun, Jan 21 2024 12:56 IST
எஸ்ஏ20 2024: 106 மீட்டர் இமாலய சிக்சரை பறக்கவிட்ட ஃபெரீரா; வைரலாகும் காணொளி! (Image Source: Google)

எஸ்ஏ20 லீக் தொடரின் இரண்டாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி, நடப்பு சீசனில் தங்களது முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கேப்பிட்டல்ஸ் அணி வெர்ரைனின் அதிரடியான அரைசதத்தின் மூலம் 167 ரன்களைச் சேர்த்தது. 

இதையடுத்து இலக்கை துரத்திய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் டொனொவன் ஃபெரீரா 20 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சர்களை விளாசி 56 ரன்களைச் சேர்த்ததன் மூலம் 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த டொனொவன் ஃபெரீரா ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

இந்நிலையில் இப்போட்டியில் ஜோபர்க் அணி பேட்டிங் செய்துகொண்டிருந்த போது இன்னிங்ஸின் 17ஆவது ஓவரை வீசிய வில்ஜோன் பந்துவீச்சில் டொனொவன் ஃபெரீரா இமாலய சிக்சர் ஒன்றை அடித்து மைதானத்திலிருந்த அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தினர். அவர் அடித்த அந்த சிக்சர்ரானது 106 மீட்டர் தூரத்திற்கு சென்றனது. 

 

இதன்மூலம் நடப்பு எஸ்ஏ20 லீக் தொடரில் அடிக்கப்பட்ட மிகப்பெரிய சிக்சராக இது மாறியது. முன்னதாக டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் வீரர் ஹென்ரிச் கிளாசன் சன்ரைசர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 105 ரன்களை விளாசியதே சாதனையாக இருந்த நிலையில், அதனை ஃபெரீரா முறியடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை