டேவிட் வார்னரை அணியிலிருந்து நீக்கக் கூடாது - ஷேன் வார்னே!

Updated: Fri, Oct 22 2021 15:12 IST
Image Source: Google

டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சூப்பர் 12 சுற்று நாளை முதல் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன. இந்நிலையில் இப்போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர் இடம்பிடிப்பாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து பேசிய வார்னே,“என்னைப் பொறுத்தவரை டேவிட் வார்னர் மிகத்திறமையான வீரர். சமீபத்தில் அவர் சரியாக விளையாடவில்லை, நிறைய ரன்கள் எடுக்கவில்லை. டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு அவர் நிறைய ஆட்டங்களில் விளையாடவில்லை. 

ஆனால் முக்கியமான போட்டிகளில் அதிக ரன்கள் எடுக்கும் வீரர்களில் ஒருவர். திறமை தான் நிரந்தரம். வார்னர் விஷயத்தில் இதுதான் சரி. எனவே அவரை அணியிலிருந்து நீக்கிவிடக் கூடாது. முதல் இரு ஆட்டங்கள் முக்கியமானவை. அவர் நன்றாக விளையாட ஆரம்பித்துவிட்டால் டி20 உலகக் கோப்பைப் போட்டியின் சிறந்த வீரர்களில் ஒருவராக இருப்பார்” என்று தெரிவித்தார்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

முன்னதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியில் 0, 2 என ரன்கள் எடுத்த வார்னர், கடைசி ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணியிலிருந்து நீக்கப்பட்டார். டி20 உலகக் கோப்பைப் பயிற்சி ஆட்டங்களில் 0,1 என டேவிட் வார்னர் மோசமாக விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை