தோனியின் முடிவால் தான் உலகக்கோப்பையை தோற்றோம் - பார்த்தீவ் படேல் சாடல்!
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடர் இன்னும் சில மாதங்களில் நடைபெற இருப்பதால் அதற்கான முன்னேற்பாடுகளை இந்திய அணி செய்து வருகிறது. இந்திய அணி வீரர்கள் மனதளவில் தைரியமாக இருப்பதற்கு முன்னால் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் வல்லுனர்கள் ஏற்கனவே நடந்த உலக கோப்பை தொடரில் நடைபெற்ற சாதகம் மற்றும் பாதகமான விஷயங்களை தெரியப்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி தான் வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திய அணி அரை இறுதி சுற்றில் நியூசிலாந்து அணியிடம் பரிதாபமான தோல்வியை தழுவியது. அந்த போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல் போன்ற வீரர்கள் ஒரு ரன்களில் தன்னுடைய விக்கெட்டை இழந்தனர், அதற்குப் பின் ரிஷப் பந்த் 36 ரன்கள் எடுத்த நிலையிலும் தினேஷ் கார்த்திக் 6 ரன்கள் எடுத்த நிலையிலும் விக்கெட்டை இழந்தனர்.
இக்கட்டான நிலையில் ஜோடி சேர்ந்த ஜடேஜா மற்றும் தோணி கூட்டணி இந்திய அணிக்கு நல்ல ரன்களை பெற்றுக் கொடுத்தது, இதில் ஏழாவது பேட்டிங்கில் களமிறங்கிய தோனி 50 ரன்கள் எடுத்திருந்த நிலையில் 49ஆவது ஓவரில் ரன் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் பரிதாப தோல்வியை தழுவியது.
என்னதான் தோனி இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு அரை சதம் அடித்தாலும் தோனி பேட்டிங் ஆர்டரில் முன்னதாகவே களமிறங்கியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று தோனியின் மீது கடுமையான விமர்சனமும் எழுந்தது. இந்த நிலையில் 2019 உலகக்கோப்பை தொடரை நினைவுபடுத்தி பேசிய பார்த்திவ் படேல், தோனி எதை நினைத்து தாமதாக பேட்டிங் செய்தார் என்று தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பார்த்தீவ் படேல் தெரிவித்ததாவது, “2019 உலகக்கோப்பை தொடருக்கான போட்டியில் தினேஷ் கார்த்திக் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்தார், தோனி ஏழாவது இடத்தில் பேட்டிங் செய்தார். இதில் தோனி ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து கொண்டே போட்டியை வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்தாரா என்று எனக்கு சுத்தமாக தெரியவில்லை.
முக்கியமான தொடர்களில் பெரியளவு மாற்றம் செய்யக்கூடாது, என்ன திட்டம் திட்டியிருக்கிறோமோ அதன்படி தான் செயல்பட வேண்டும். நெருக்கடி என்பது போட்டிக்கு தகுந்தவாறு நிச்சயம் உருவாகும். 2015 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி இப்படித்தான் தோல்வியை தழுவியது. ஆனால் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது தான் மிகப்பெரிய தவறு, இதனால் தான் இந்திய அணி தோல்வியை சந்திக்க நேர்ந்தது.
அதேபோன்று 2019 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் சரி இல்லை மேலும் 2021 உலகத்தை தொடரில் நாம் தலைசிறந்த சுழற் பந்துவீச்சாளர் சஹலை அணியில் சேர்க்கவில்லை இதுவெல்லாம் நான் கடந்த கால முக்கியமான தொடர்களில் செய்தது மிகப்பெரிய தவறாகும், இதனால்தான் நம்மால் ஐசிசியால் நடத்தும் போட்டிகளில் வெற்றி பெற முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.